Skip to main content

உளவுத்துறை அதிகாரிகளின் பணம் அபேஸ்! யார் பொறுப்பு?

Published on 29/10/2018 | Edited on 29/10/2018
Where is the money?



சுகந்திர போராட்ட வீரரும் தமிழகத்தில் ஃபார்வார்டு பிளாக் கட்சியின் தமிழக தலைவராக இருந்த பசும்பொன்முத்து ராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் தேவர் ஜெயந்தி ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 30 ஆம் தேதி அரசு விழாவாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
 

தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையை முன்னிட்டு எந்த பிரச்சனைகளும் நடக்காமல் இருக்க தமிழகத்தின் தென் மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கபடுவது வழக்கம்.
 

அதே போல தமிழகத்தின் முதல்வர் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய தலைவர்கள் என பலரும் தேவரும் மரியாதை செலுத்த வருவதால் மாநில காவல்துறையின் முக்கிய அதிகாரிகள் தொடங்கி உளவுத்துறை வரை அனைவரும் அங்கு குவிந்து இருப்பார்கள்.
 

சீருடை அணிந்த காவல்துறை அதிகாரிகளை மட்டும் இல்லாமல் மக்களுடன் மக்களாக கலந்து உளவுத்துறை அதிகாரிகள் தொடர்ச்சியாக கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். 
 

இதில் 500க்கும் மேற்பட்ட உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் சீருடை அணிந்த பல்லாயிர காவலர்களும் பணியில் ஈடுபட்டு இருக்கிறார்கள். 
 

இப்போது பணியில் ஈடுபட்டு இருக்க கூடிய காவலர்களுக்கு ஒரு நாளைக்கு உணவு படி என்பது 250 ரூபாய் வீதம் மூன்று நாட்களுக்கு 750 ரூபாய்  வழங்கபட வேண்டும். 
 

ஆனால் தற்போது 150 ரூபாய் வீதம் 450 ரூபாய் மட்டுமே வழங்கபட்டு இருப்பதாக உளவுத்துறையினர் வேதனை படுகிறார்கள். 
 

உளவுத்துறை அதிகாரிகளுக்கு பொறுப்பாக இருக்க கூடிய ஐ.ஜி சத்தியமூர்த்தி, எஸ்.பி .கண்ணன் ஆகியோர் தான் இதற்கான பொறுப்பாக இருக்கிறார்கள்.
 

ஆனால் உளவுத்துறைக்கு கீழ் மட்டதிலிருந்து தகவல்களை தலைமைக்கு அனுப்பி எந்த பிரச்சனையும் நடக்காமல் இருக்க பெரிதும் உதவ கூடியவர்கர்களுக்கு சென்று சேர வேண்டிய பணத்தை யார் சுருட்டுகிறார்கள் என்பது கீழ்மட்ட  உளவுத்துறை அதிகாரிகளின் கேள்வியாக இருக்கிறது. 
 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.டி. ஊழியர் ஏமாற்றம்; லட்சக்கணக்கில் மோசடி

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
18 lakh rupees scam by IT employee claiming profit from stock trading

திருச்சி திருவானைக்காவல் அழகப்பா தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன்(46) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து பகுதி நேர வேலை என்ற ஒரு லிங்கை டவுன்லோட் செய்தார். அப்போது அதில் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டித் தருவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதனை நம்பிய ராமச்சந்திரன், மோசடி நபர்கள் கூறிய 8 வங்கிக் கணக்குகளுக்கு பல்வேறு தவணைகளாக கடந்த 3 மாதத்தில் ரூ.18 லட்சத்து 45 ஆயிரம் பணத்தை அனுப்பி வைத்தார். பின்னர் அந்த மர்ம ஆசாமிகள் அவருக்கு லாபத் தொகையும் தரவில்லை. முதலீடு செய்த பணத்தையும் திரும்பத் தராமல் ஏமாற்றிவிட்டனர். பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கொண்ட ராமச்சந்திரன், இதுகுறித்து ஆன்லைன் மூலமாக திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் கன்னிகா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story

ஆருத்ரா மோசடியில் அடுத்த பகீர்; பறக்கவிருக்கும் சம்மன்கள் 

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
Investment in film production; Arudra fraud towards next level

சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது ஆருத்ரா கோல்டு நிறுவனம். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக அறிவித்தது. இதை நம்பி, லட்சக்கணக்கானோர் முதலீடு செய்தனர். ஆனால், முதலீட்டாளர்களுக்குப் பணத்தை நிறுவனம் திரும்பச் செலுத்தவில்லை.

இதனைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் அளித்த புகார் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கை கூடுதல் டி.ஜி.பி. அபின் தினேஷ் மோடக், ஐ.ஜி. ஆசியம்மாள், எஸ்.பி. மகேஷ்வரன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கின் அடிப்படையில் அந்நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்ட நிலையில், மேலாண் இயக்குநர்கள் ராஜசேகர், உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜ் ஆகியோர் வெளிநாட்டில் தலைமறைவாகினர். இது தொடர்பாகத் தற்போது வரை 23 பேரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். முக்கிய குற்றவாளி ராஜசேகர் துபாயில் கைது செய்யப்பட்டு அவரை இந்தியா அழைத்து வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குற்றவாளிகளை கைது செய்ய போலீசார் முனைப்பு காட்டும் அதே நேரத்தில் மோசடி செய்யப்பட்ட பணம் எப்படி எல்லாம் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்தும் மறுபக்கம் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஆருத்ரா கோல்டு டிரேடிங் மோசடி விவகாரத்தில் மோசடி பணம் சினிமாவில் முதலீடு செய்தது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. சினிமாவில் எந்தெந்த படங்களுக்கு பைனான்ஸ் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து தற்போது விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 'ஆருத்ரா பிக்சர்ஸ்' என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட திரைப்படத் தயாரிப்புகள் குறித்தும் போலீசார் விசாரணையைத் துருவி வருகின்றனர். மோசடி பணத்தில் சினிமா துறையில் பணம் கை மாற்றப்பட்ட நபர்கள் பற்றி விசாரித்து சம்மன் அனுப்பி அவர்களிடம் விசாரணை நடத்தவும்  தற்பொழுது முடிவெடுத்துள்ளது பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறை.