Skip to main content

மரமாத்துப்பணிக்கான டாக்குமெண்ட் எங்கே; மாவட்ட ஆட்சியரை வறுத்தெடுத்த மத்திய அரசின் கூடுதல் செயலாளர்!

Published on 14/07/2019 | Edited on 14/07/2019

டெல்டா மாவட்டங்களில் கடந்த 3 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் குடிமராமத்து திட்டங்களின் மூலம் கிடைத்த பயன்கள் என்னென்ன என தஞ்சாரில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் மத்திய அரசின் கூடுதல் செயலாளர் பிரமோத் குமார் பதக் சரமாறியாக கேள்வி கேட்டது மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை சடசடக்க வைத்துவிட்டது.

Where is the logging document! argument with collector


தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நீராதாரங்களை மேம்படுத்துவது தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தலைமை வைத்தார். கூட்டத்தில் மத்திய அரசு கூடுதல் செயலாளர் பிரமோத்குமார் பதக் பேசினார் அப்போது ," நிலத்தடி நீரை சேமிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன, அதற்கான ஆதாரங்கள் எங்கே," என்றார், அதற்கு பதில் அளித்த ஆட்சியர் அண்ணாதுரை, "மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு பல்வேறு பணிகள் செய்யப்பட்டு நிலத்தடி நீர் சேமிக்கப்பட்டுள்ளது," என்றார்.

அடுத்த நொடியே ",அப்படியானால் இந்த திட்டத்துக்கு இதுவரை செலவழிக்கப்பட்ட தொகை எவ்வளவு, பணிகள் முடிந்திருந்தால் அதனால் கிடைத்த பயன்கள் என்னென்ன, இதுதொடர்பான என்னென்ன டாக்குமெண்டேஷன் உள்ளது. தூர்வாரிய இடத்தினை மீண்டும் மீண்டும் தூர்வாரி இருக்கிறீர்களா, அதன் அறிக்கை ஆவணங்கள் எங்கே என கேள்வி மேல் கேள்விக்கேட்டு துளைத்தெடுத்தார்.

இதனை சற்றும் எதிர்பார்த்திடாத மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரையும், சக அதிகாரிகளும் திக்குமுக்காடி போனார்கள்,  அது, இது, இப்படி, அப்படி என உளரி தள்ளிய கலெக்டரை கண்டு தலையில் தட்டிக்கொண்ட செயலாளர் அமைதியாக இருந்தார், ஒரு வழியாக சமாளித்து விரைவில் டாக்குமெண்டேஷன் தயாரித்து வழங்குகிறோம் என்றார் மாவட்ட ஆட்சியர். இந்த சம்பவம் விவசாயிகள் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாணவர்களுக்கான சத்துணவு முட்டைகள் குறைவு; ஆட்சியரின் உத்தரவால் பரபரப்பு

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
Nutrient organizer suspended due to shortage of eggs in student rations

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி அரக்கோணம் அடுத்த கும்பினிபேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு நடத்தினார். அப்போது பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு சாப்பாடு மற்றும் முட்டை வழங்குவதை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது 7 மாணவர்களுக்கு முட்டை கிடைக்கவில்லை.

இதைத்தொடர்ந்து முட்டைகள் இருப்பு வைக்கும் அறை மற்றும் அரிசி, பருப்பு வைக்கும் அறையை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் சத்துணவு முட்டைகள் போதுமான அளவு இருப்பு இல்லை என்பது கண்டறியப்பட்டது. இது குறித்து சத்துணவு அமைப்பாளர் மலர் என்பவரிடம் மாவட்ட ஆட்சியர் கேட்டதற்கு வேறு பள்ளியில் முட்டைகள் இறக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார்.

இந்நிலையில் பதிவேடுகளை முறையாக பராமரிக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக சத்துணவு அமைப்பாளர் மலரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் வளர்மதி உத்தரவிட்டார். மேலும் சத்துணவு அமைப்பாளர் மலர் பணியில் சேர்ந்த நாளிலிருந்து இதுநாள் வரை பதிவேடுகள் முறையாக பராமரித்துள்ளாரா? அந்த பதிவேடுகளில் ஏதேனும் குறைகள் கண்டறியப்பட்டால் அதற்கு உண்டான அபராதம் விதிக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். மாவட்ட ஆட்சியரின் அதிரடி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

தஞ்சை ஆணவக்கொலை; மேலும் மூன்று பேர் கைது

Published on 12/01/2024 | Edited on 12/01/2024
Tanjore Massacre; Three more people were arrested

தஞ்சையில் நடந்த ஆணவக்கொலை சம்பவத்தில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள நெய்வவிடுதி பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் ஐஸ்வர்யா (19). இவரும், பூவாளூர் பகுதியைச் சேர்ந்த நவீன் (19) என்பவரும் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போதே காதலித்து வந்துள்ளனர். இருவரும் திருப்பூர் மாவட்டம் அரவப்பாளையத்தில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர்.

இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது காதலுக்கு ஐஸ்வர்யாவின் குடும்பத்தார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால், இருவரும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். மேலும், இவர்கள் இருவரும் திருப்பூரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கி வந்துள்ளனர்.

இதையடுத்து, இவர்கள் திருமணம் செய்தது ஐஸ்வர்யாவின் பெற்றோருக்குத் தெரியவந்தது. இது தொடர்பாக, ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து, கடந்த 2 ஆம் தேதி பல்லடம் காவல்துறையினர், ஐஸ்வர்யாவை சமாதானப்படுத்தி அவரது தந்தை மற்றும் உறவினர்களுடன் அனுப்பி வைத்தனர். அதன் பின்னர், கடந்த 3 ஆம் தேதி நவீனை தொடர்பு கொண்ட அவரது நண்பர்கள், ‘ஐஸ்வர்யாவை அவரது தந்தை மற்றும் உறவினர்கள் அடித்து துன்புறுத்தி கொலை செய்து எரித்துவிட்டனர்’ என்று கூறியுள்ளனர்.

இதில் அதிர்ச்சியடைந்த நவீன், ஒரத்தநாடு பகுதிக்குச் சென்றுள்ளார். மேலும், அவர் இந்த சம்பவம் குறித்து வாட்டாத்திக்கோட்டை காவல் நிலையத்தில் ஐஸ்வர்யா ஆணவக் கொலை செய்யப்பட்டதாக புகார் அளித்தார். அவர் அளித்த அந்த புகாரின் அடிப்படையில், நெய்வவிடுதி மற்றும் பூவாளூர் பகுதிகளுக்குச் சென்று காவல்துறையினர் கடந்த 8ம் தேதி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், ஐஸ்வர்யா மர்மமான முறையில் இறந்துள்ளதாகத் தெரியவந்தது.

இதையடுத்து, ஐஸ்வர்யா உடல் எரிக்கப்பட்ட சுடுகாட்டிற்கு காவல்துறையினர் சென்று பார்த்தபோது, அங்கு உடல் எரிக்கப்பட்ட பின் சாம்பல் கூட இல்லாததை கண்ட அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள், அவரது மனைவி ரோஜா, ஐஸ்வர்யாவின் பெரியம்மா பாசமலர், அவரது சகோதரி விளம்பரசி, மற்றொரு சகோதரி இந்து ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில், ஐஸ்வர்யா கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யாவின் தந்தை பெருமாள் அவரது மனைவி ரோஜா இருவரையும் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த மற்றவர்களையும் அடையாளம் கண்ட போலீசார் விசாரணை செய்து திருச்செல்வம், சின்ராஜ், முருகேசன் ஆகிய 3 பேரை இன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பியுள்ளனர். இதே சம்பவத்தில் மேலும் சிலரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் மேலும் 3 பேர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

பல்லடம் போலீசார் திருமணம் செய்துள்ள ஒரு தம்பதியை வழக்குப்பதிவு செய்யாமல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் புகார் கொடுத்தவர்களுடன் அனுப்பிவைத்ததால் தான், இப்படி ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்பும் நிலையில், பல்லடம் காவல் நிலைய ஆய்வாளர் முருகையன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.