Skip to main content

தமிழக அரசு இணைய பக்கத்தில் புதிய எம்.பிகளின் பட்டியல் எங்கே!

Published on 19/07/2019 | Edited on 19/07/2019

தற்போது அறிவியல் யுகத்தில் அனைத்து வசதிகளையும் ஆன்லைன் மூலமாகவே அனைத்தும் செய்து கொள்ளும் நிலையில் இருக்கிறோம். அதேபோல தமிழக அரசின் திட்டங்களை தமிழ்நாடு அரசின் இணையதளத்தில் உடனுக்குடன் பதிவேற்றுகிறோம் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். 

 Where is the list of new MPs on the Tamil Nadu Government web page!


நடந்து முடிந்த எம்.பி. தேர்தல் முடிவுகள் வெளியாகி இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.களும் பாரளுமன்றத்தில் பதவி ஏற்று முதல் பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு தமிழகத்திற்கான பிரச்சனைகளை முழுவேகத்தோடு பேசிக்கொண்டு வருகிறார். 

குறிப்பாக ரயில்வேயில் இந்தி கட்டாயம் ஆக்கப்படும் என்கிற அறிவிப்பு மற்றும் தபால்துறையில் மாநில மொழிகளில் தேர்வு கிடையாது ஆகிய உத்தரவுகளை எதிர்த்து உடனடியாக பாரளுமன்றத்தில் குரல் கொடுத்து அந்த திட்டங்களை ரத்து செய்ய வைத்தனர் தங்கள் கடமைகளை ஆற்றிவருகிறார்கள்.

ஆனால் அவர்கள் பற்றிய குறிப்புகளை தமிழக அரசின் இணைதள பக்கத்தில் இன்னும் மாற்றம் செய்ய முடியமல் பழைய எம்.பிகளின் பட்டியலை வைத்திருக்கிறார்கள். 2019 மக்களவை உறுப்பினர்கள் பட்டியல் புதிப்பிக்கப்படவில்லை.ஏன் இன்னும் புதிய எம்பிக்கள் பட்டியல் வெளியிடவில்லை என கேள்வி எழுப்புகின்றனர்சமூக ஆர்வலர்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கஞ்சா புழக்கத்தைக் கண்டுகொள்ளாத காவல்துறை! புகாரளித்தவர் மீது கொலை முயற்சி!

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
allegations of police did not notice the circulation of cannabis

மதுரை - திருமங்கலம் அருகே மருது சேனை அமைப்பின் நிறுவனர் ஆதிநாராயணன் மீது  நான்கு பேர் கொண்ட கும்பல் பெட்ரோல் குண்டு வீசியதோடு, சுட்டுக் கொல்லவும் முயற்சித்துள்ளது.

இந்தக் கொலை முயற்சியின் பின்னணி என்ன?

திருமங்கலம் அருகிலுள்ள மையிட்டான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆதிநாராயணன், மருது சேனை அமைப்பின் நிறுவனத் தலைவராக இருக்கிறார். கள்ளிக்குடி - கல்லுப்பட்டி சாலையில் இவருடைய அலுவலகம் உள்ளது. இவர், தனது அலுவலகத்திலிருந்து கள்ளிக்குடி – விருதுநகர் நான்குவழிச்சாலையில் மையிட்டான்பட்டிக்கு காரில் சென்றபோது, எதிர்திசையில் வந்த கார் மோதியது.

இதனைத் தொடர்ந்து காரில் வந்த கும்பல் பெட்ரோல் குண்டு வீசியுள்ளது. பெட்ரோல் குண்டு காரில் படாத நிலையில், காரை ஓட்டிவந்த டிரைவர், சாலை ஓரப்பள்ளத்தில் காரை விட்டு தப்பித்துள்ளார். அந்தக்கும்பல் மீண்டும் பெட்ரோல் குண்டு வீச முயற்சித்தபோது, எறிவதற்கு முன்பாகவே குண்டு வெடித்துள்ளது. உடனே,  அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பிஒடியது.

இச்சம்பவம் குறித்து கள்ளிக்குடி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிந்ததும், ஏ.டி.எஸ்.பி. மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு சோதனை நடந்தது. ஆதிநாராயணன் மீது நடத்திய கொலை முயற்சி,  அக்கட்சியின் நிர்வாகிகளுக்குத் தெரியவர, கொல்ல முயன்றவர்களைக் கைது செய்யக்கோரி, கள்ளிக்குடி – விருதுநகர் நான்கு வழிச்சாலையின் குறுக்கே காரை நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறை நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு மறியலைக் கைவிட்டனர்.

allegations of police did not notice the circulation of cannabis

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மருது சேனை அமைப்பின் நிறுவனர் ஆதிநாராயணன் “இரண்டு நாட்களுக்குமுன், விருதுநகர் மற்றும் கள்ளிக்குடி பகுதியில் காவல்துறையின் துணையோடு கஞ்சா புழக்கம் அதிகரித்து வருவது குறித்து, திருமங்கலம் டி.எஸ்.பி. அலுவலகத்தில் புகாரளித்தேன். நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினேன். காவல்துறையினரின் துணையோடு, ஏற்கெனவே என்னுடைய அமைப்பின் பொருளாளரைக் கொலை செய்த ஞானசேகரின்  ஆதரவாளர்களை ஏவிவிட்டு, என்னைக் கொலை செய்யும் நோக்கத்தில்தான் பெட்ரோல் குண்டு வீசி, துப்பாக்கியாலும் சுட்டுக்கொல்வதற்கு முயற்சித்தனர். கார் டிரைவரின் சாமர்த்தியத்தால் நான் உயிர் பிழைத்தேன். இந்த விஷயத்தில் காவல்துறை அலட்சியம் காட்டுகிறது. குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவேண்டும். இல்லையென்றால், தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம்.” என்றார். 

Next Story

“அதிகளவில் உயிரிழப்பு தமிழகத்தில்தான்” - தேசிய தூய்மைப் பணியாளர்கள் ஆணையத் தலைவர் வேதனை

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
Allegation of not paying salaries to sanitation workers in Tamil Nadu on due dates

தமிழ்நாட்டில் தூய்மை பணியாளர்களுக்கு உரிய தேதியில் சம்பளம் வழங்கப்படுவதில்லை என தேசிய தூய்மைப் பணியாளர்கள் ஆணைய தலைவர் வேதனை தெரிவித்துள்ளார்.

சேலத்தில் தேசிய தூய்மைப் பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தமிழ்நாட்டில் தூய்மை பணியாளர்களுக்கு உரிய தேதியில் சம்பளம் வழங்கப்படுவதில்லை. இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். சீருடை, பாதுகாப்பு உபகரணங்களை ஒப்பந்ததாரர்கள் 10 நாட்களுக்குள் வழங்க வேண்டும்; இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பணியின் போது தூய்மை பணியாளர்கள் அதிக அளவில் உயிரிழக்கின்றனர்.

ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மாநாராட்சி நிர்வாகமே ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவது போன்று, தமிழக அரசும் நேரடியாக தூய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். இதனால் அவர்களின் பிரச்சினை 60 சதவீதம் வரை குறையும்.

தூய்மைப் பணியாளர்களின் பாதுகாப்புக்காக தேசிய ஆணையம் இருப்பதுபோல, மாநில ஆணையத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும். 2022 முதல் நிரந்தர தூய்மைப் பணியாளர் ஓய்வுபெற்றால், அந்த இடத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கலாம் என்ற உத்தரவை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். மேலும், தூய்மைப் பணியாளர்கள் வேறு தொழிலுக்குச் செல்ல விருப்பப்பட்டால், அவர்களுக்கு அரசு நிதியுதவி வழங்க வேண்டும்” என்றார்.