
திருவள்ளூர் மார்க்கெட் பகுதியில் இயங்கிவரும் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட சென்ற நபர் ஒருவர் மீன் குழம்பில் ஏன் மீன் இல்லை என ரகளையில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
சமீப காலமாக ஹோட்டல்களில் அசைவ உணவுகளின் தரம்குறித்து உணவுப்பாதுகாப்பு துறையினரின்சோதனை ஒருபுறம் என்றால் உணவு அருந்துவோர் வைக்கும் குற்றச்சாட்டுகள் மறுபுறம். இந்நிலையில் திருவள்ளூர் மார்க்கெட் பகுதியில் இயங்கிவரும் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட சென்ற நபர் உணவு பரிமாறுபவரை அழைத்து 'எங்கய்யா மீன் குழம்பு கேட்டேன் இதில் மீனே இல்லை. மீன் குழம்புன்னா மீன் இருக்கணுமா கூடாதா?' எனக் கேட்க, அவர் 'மீன் எல்லாம் இருக்காது' எனப் பதிலளித்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர், 'மீன் இல்லை என சொல்வதற்கா 95 ரூபாய் வாங்குற, காசு கொடுத்துட்டுதான்சாப்பிடுகிறோம்' என இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Follow Us