Advertisment

‘குழந்தையின் தந்தை எங்கே?’- உறவினர்களின் கேள்வியால் தற்கொலை செய்துகொண்ட தாய்!

‘Where is the father of the child?’ - The mother upset

திருச்சி சுப்பிரமணியபுரம் ஏரிக்கரை ரோடு பன்னீர் செல்வம் தெருவைச் சேர்ந்தவர் கோகுல் (வயது 37). மருத்துவரான இவர் தொட்டியத்தில் மருத்துவமனை நடத்திவருகிறார். இவரது மனைவி சஞ்ஜினி (30).மகளிர் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவரான இவர், தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பேராசிரியையாக பணிபுரிந்துவந்தார். இவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்தது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு மகன் உள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

Advertisment

இதனால் இருவரும் பிரிந்து தனித்தனியே வசித்துவந்தனர். கோகுல் தொட்டியத்தில் வசித்துவருகிறார். சஞ்ஜினி மகனுடன் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள தனது தாத்தாவான பிரபல மருத்துவர் கோவிந்தராஜ் (81) என்பவருடன் வசித்துவந்தார். அது மட்டுமின்றி சஞ்சினி திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் தனியாக மருத்துவமனை நடத்திவந்தார். இந்த நிலையில், சஞ்ஜினி தனது மகனுக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் நேற்று முன்தினம் (19.09.2021) காது குத்து விழா நடத்தினார். இதில் அவரது உறவினர்கள் மட்டுமின்றி, நண்பர்கள், தோழிகள் குடும்பத்துடன் பங்கேற்றனர். ஆனால் இந்த விழாவில் கணவர் மட்டும் பங்கேற்கவில்லை.

Advertisment

அப்போது, விழாவிற்கு வந்த சிலர் சஞ்ஜினியிடம் குழந்தையின் தந்தை எங்கே? என கேட்டனர். இது அவருக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியதாக தெரிகிறது. இதனையடுத்து விழா முடிந்ததும் சஞ்சினி குழந்தையை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டார். பின்னர் திடீரென வீட்டில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். போலீஸ் விசாரணையில், மகனின் காது குத்து விழாவின்போது கணவரைப் பற்றி சிலர் கேட்டதால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

Suicide Doctor trichy
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe