Skip to main content

‘குழந்தையின் தந்தை எங்கே?’- உறவினர்களின் கேள்வியால் தற்கொலை செய்துகொண்ட தாய்!

Published on 21/09/2021 | Edited on 21/09/2021

 

‘Where is the father of the child?’ - The mother upset

 

திருச்சி சுப்பிரமணியபுரம் ஏரிக்கரை ரோடு பன்னீர் செல்வம் தெருவைச் சேர்ந்தவர் கோகுல் (வயது 37). மருத்துவரான இவர் தொட்டியத்தில் மருத்துவமனை நடத்திவருகிறார். இவரது மனைவி சஞ்ஜினி (30). மகளிர் மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவரான இவர், தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பேராசிரியையாக பணிபுரிந்துவந்தார். இவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து முடிந்தது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு மகன் உள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

 

இதனால் இருவரும் பிரிந்து தனித்தனியே வசித்துவந்தனர். கோகுல் தொட்டியத்தில் வசித்துவருகிறார். சஞ்ஜினி மகனுடன் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள தனது தாத்தாவான பிரபல மருத்துவர் கோவிந்தராஜ் (81) என்பவருடன் வசித்துவந்தார். அது மட்டுமின்றி சஞ்சினி திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் தனியாக மருத்துவமனை நடத்திவந்தார். இந்த நிலையில், சஞ்ஜினி தனது மகனுக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் நேற்று முன்தினம் (19.09.2021) காது குத்து விழா நடத்தினார். இதில் அவரது உறவினர்கள் மட்டுமின்றி, நண்பர்கள், தோழிகள் குடும்பத்துடன் பங்கேற்றனர். ஆனால் இந்த விழாவில் கணவர் மட்டும் பங்கேற்கவில்லை.

 

அப்போது, விழாவிற்கு வந்த சிலர் சஞ்ஜினியிடம் குழந்தையின் தந்தை எங்கே? என கேட்டனர். இது அவருக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியதாக தெரிகிறது. இதனையடுத்து விழா முடிந்ததும் சஞ்சினி குழந்தையை அழைத்துக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டார். பின்னர் திடீரென வீட்டில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். போலீஸ் விசாரணையில், மகனின் காது குத்து விழாவின்போது கணவரைப் பற்றி சிலர் கேட்டதால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நெருங்கும் நாடாளுமன்றத் தேர்தல்; பரப்புரையைத் தொடங்கும் முதல்வர்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Parliamentary elections approaching The CM mk stalin will start the campaign

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16-03-2024) நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை, ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் 9 தொகுதிகளுடன், புதுவை தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 2 தொகுதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 2 தொகுதி, ஐ.யூ.எம்.எல் - 1 தொகுதி, கொ.ம.தே.க - 1 தொகுதி, ம.தி.மு.க. - 1 தொகுதி, வி.சி.க. - 2 தொகுதி என ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தன. தி.மு.க. தமிழகத்தில் 21 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

இதனையடுத்து தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பாக ராமநாதபுரத்தில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் நவாஸ் கனிக்கே மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக சு. வெங்கடேசன் எம்.பி. மீண்டும் போட்டியிட உள்ளார். திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம் போட்டியிட உள்ளார்.

திருச்சி தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளராக துரை வைகோ போட்டியிடவுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூரில் மீண்டும் கே. சுப்பராயன் போட்டியிட உள்ளார். நாகப்பட்டினத்தில் வை. செல்வராஜ் போட்டியிட உள்ளார். நாமக்கல் மக்களவைத் தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் வேட்பாளராக சூரியமூர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் திமுக - காங்கிரஸ் சார்பில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களின் பெயர்களும் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Parliamentary elections approaching The CM mk stalin will start the campaign

இந்நிலையில். திருச்சியில் வரும் 22 ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்க உள்ளார். இதனையடுத்து 23 ஆம் தேதி திருவாரூரில் பரப்புரையை மேற்கொள்ள உள்ளார். அதே சமயம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் மார்ச் 24 ஆம் தேதி தனது பரப்புரையைத் தொடங்கி மார்ச் 31 ஆம் தேதி வரை பல்வேறு இடங்களில் பரப்புரை மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

சூடுபிடிக்கும் திருச்சி மாவட்டம்; அதிமுக முன்னாள் அமைச்சர் தலைமையில் ஆலோசனை!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Consultation led by AIADMK ex-minister in Trichy!

அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி தலைமையில், மாவட்ட, ஒன்றிய, பகுதி, கழக, சார்பு அணி செயலாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் தில்லை நகர் பகுதியில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகத்திற்குட்பட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் ஒன்றிணைந்து திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்தில் இடம் பெற்றுள்ள திருச்சி பாராளுமன்றத் தொகுதியிலும், பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியிலும் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் அவர்கள் ஆலோசனைப்படி அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்து அனைவரும் சிறப்பாகத் தேர்தல் பணியாற்றுவது. வேட்பாளர்களின் வெற்றிக்கு அயராது பாடுபடுவது எனவும், அதேபோன்று பாராளுமன்றத் தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரும், பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவரும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் முன்னாள் அமைச்சர் வளர்மதி, கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன், சிறுபான்மையினர் நலப்பிரிவு மாவட்டச் செயலாளர் புல்லட் ஜான், முன்னாள் எம்எல்ஏக்கள் இந்திரா காந்தி, பரமேஸ்வரி, முருகன், மீனவர் அணி செயலாளர் பேரூர் கண்ணதாசன், ஒன்றிய செயலாளர் எல். ஜெயக்குமார், மாணவரணி மாவட்டச் செயலாளர் அறிவழகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.