Where are corona infections taken? -High Court question on the record!

கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் எங்கெங்கு அழைத்து செல்லப்படுகிறார்கள், எங்கு அனுமதிக்கப்படுகிறார்கள்என்பதற்கான பதிவேடு பராமரிக்கப்படுகிறதா என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Advertisment

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் ஆதிகேசவன், மருத்துவமனையிலிருந்து மாயமானார். இதனால்தன் தந்தையை மீட்கக்கோரிஅவரது மகன் துளசிதாஸ், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

Advertisment

அந்த வழக்கு, நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் வி.எம்.வேலுமணி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகராட்சி ஆணையர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், காய்ச்சல் முகாமிலிருந்து ஒருவரைக் கண்டறிவது முதல் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வந்து மருத்துவமனையில் சேர்ப்பதுடன்,தங்கள் வேலை முடிந்துவிடுவதாகவும், அதன்பிறகுசுகாதாரத்துறை கட்டுப்பாட்டில்தான் ஒரு நோயாளி இருப்பார்.இருப்பினும், அவரது குடும்பத்தினர் மற்றும் காவல்துறையினர் போல, மாயமான ஆதிகேசவனை நாங்களும் தேடி வருகிறோம் என்று குறிப்பிட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்துநீதிபதிகள், கரோனா நோயாளிகளைக் கையாள்வதில் சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி இடையே போதிய ஒருங்கிணைப்பு உள்ளதா,தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் எங்கெங்கு அழைத்து செல்லப்படுகிறார்கள்,எங்கு அனுமதிக்கப்படுகிறார்கள்எனபதிவேடு பராமரிக்கப்படுகிறதா என்று கேள்வி எழுப்பினர்.

Advertisment

அதற்கு மாநகராட்சி தரப்பில், தங்களுக்கும்சுகாதாரத்துறைக்கும் இடையே போதிய ஒருங்கிணைப்பு உள்ளது. பராமரிக்கப்படும் பதிவேடுகளைத் தாக்கல் செய்கிறோம். மேலும், ஆதிகேசவனைப் பற்றி விசாரிக்கும் பணிகளை மேற்கொள்ள,அனைத்து மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுகுறித்து, முழுமையாக விளக்கம் அளிப்பதற்கு ஒருவாரம் அவகாசம் வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்துள்ளனர்.