Advertisment

“அ.தி.மு.க.வில் பிரச்சனை நிலவும்போதெல்லாம் தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிடுகிறது..”- ராஜேந்திரபாலாஜி வேதனை!

publive-image

விலைவாசி உயர்வு, வீட்டு வரி உயர்வு, சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை உயர்த்திய தி.மு.க. அரசைக் கண்டித்து, செப். 29- ஆம் தேதி விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சிவகாசி- திருத்தங்கல்லில் கண்டனப் பொதுக்கூட்டம் நடத்துகிறது. இதில் கலந்துகொண்டு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.

Advertisment

இந்நிலையில், சிவகாசி தொகுதி கழகம் சார்பில் நிர்வாகிகள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் ராஜேந்திரபாலாஜி, “ஒரு சோதனையான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். ஆட்சியை அ.தி.மு.க. இழக்கவில்லை. ஆட்சி நம்மிடமிருந்து பறிக்கப்பட்டது. அதற்குக் காரணம் எப்போதெல்லாம் அ.தி.மு.க.வில் பிரச்சினை நிலவுகிறதோ, அப்போதெல்லாம் தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிடுகிறது. கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் எவ்வளவோ திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம்.

Advertisment

புதிய திட்டங்களைக் கொண்டுவந்துள்ளோம். ஆனாலும் மக்களின் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் வாங்கத் தவறிவிட்டோம். அதனால், எதிர்க்கட்சியாக அமர்ந்துள்ளோம். இந்த கண்டனப் பொதுக்கூட்டம் அ.தி.மு.க.வை மீண்டும் ஆட்சியில் அமரவைக்கும் படிக்கட்டாக அமையவேண்டும்” என்றார்.

Speech Leader admk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe