style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.
ரஜினிகாந்த் டிவி சேனல் ஆரம்பித்தால்அதிமுகவிற்கு பாதிப்புஏற்படுமா? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில்,
எந்த ஒரு பாதிப்பும் அதிமுகவிற்கு வராது. எங்களுக்கென்று ஒரு வாக்கு வங்கி இருக்கிறது. கிட்டத்தட்ட 45 முதல் 50 சதவீதம் வரை வாக்கு வங்கி அதிமுகவுக்குஉள்ளது. இந்த 50 சதவீத ஓட்டை யாரும் தொடமுடியாது. இதுவே நிதர்சனமான உண்மை. ரஜினிகாந்த் அவர்கள் டிவி சேனல் ஆரம்பிக்கிறார், கட்சி ஆரம்பிக்கிறார் என்றால் அதைப்பற்றி கவலைப்பட வேண்டியது திமுகவும் மற்ற கட்சிகளும் தான்.
அதேபோல்கமலஹாசன் நாடாளுமன்ற தேர்தலில் நின்றால் திமுக ஓட்டுகளை அல்லது மற்ற கட்சிகளின் ஓட்டுகளை தான் பிரிப்பார்.எங்கள் ஓட்டுகளை கை வைக்கவே முடியாது. எங்களுடைய ஓட்டு வங்கி என்பது 50%. அது முழுமையாக எங்களுக்கு தான் வரும். எனவே எப்போது தேர்தல்நடந்தாலும் அதிமுகதான் வெற்றிபெறும் எனக் கூறினார்.