latha_rajinikanth

Advertisment

கோச்சடையான் படத்திற்காக தனியார் நிறுவனத்திடம் வாங்கிய கடனை 3 மாதத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும் என லதா ரஜினிகாந்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோச்சடையான் படத்திற்காக லதா ரஜினிகாந்த், பெங்களூரை சேர்ந்த ஆட் பீரோ என்ற தனியார் நிறுவனத்திடம் ரூ.10 கோடி கடன் பெற்றுள்ளார். இதில் ரூ.1.5 கோடியை மட்டும் திருப்பிக் கொடுத்த லதா ரஜினிகாந்த், இன்னும் ரூ.8.5 கோடி கடன்பாக்கி வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில், கடனைத் திருப்பித்தர உத்தரவிடுமாறு ஆட் பீரோ நிறுவனம் உச்சநீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்துள்ளது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், ரூ.8.5 கோடி கடன்பாக்கியை ஏன் திருப்பித் தரவில்லை, எப்போது செலுத்துவீர்கள் என லதா ரஜினிகாந்துக்கு கேள்வி எழுப்பியது.

Advertisment

பின்னர் இதுதொடர்பாக, மதியம் 12.30 மணிக்குள் பதில் அளிக்குமாறு கெடுவிதித்திருந்தது. இதனையடுத்து, ஆட் பீரோ நிறுவனத்துக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையை 3 மாதத்துக்குள் திரும்ப செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் லதா ரஜினிகாந்த் கடனை திருப்பிச் செலுத்தாவிட்டால், குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.