ADVERTISEMENT

டாஸ்மாக் பார்கள் திறக்கப்படுமா?  எதிர்பார்ப்பில் பார் உரிமையாளர்கள்!

10:16 AM Sep 15, 2020 | kalaimohan

ADVERTISEMENT

கரோனா நோய் தொற்றால் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு அமல்படுத்தின. 2020 மார்ச் மாதம் மூடப்பட்ட டாஸ்மாக் பார்களை திறக்க வேண்டும் என ஏலம் எடுத்த உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

ADVERTISEMENT

இதுகுறித்து டாஸ்மாக் பார் நிர்வாகி ஒருவர் கூறியதாவது, “டாஸ்மாக் எனப்படும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் தமிழ்நாட்டில் மதுவினை வர்த்தகம் செய்யும் நிறுவனம் ஆகும். மது விற்பனையில் 80% விஸ்கி, பிராந்தி, ரம், ஓட்கா, ஒயின் போன்ற மதுவகைகளும், மிச்சம் உள்ள 20 விழுக்காடு பீர்களும் இடம்பெறுகின்றன.

திருச்சி மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளில் 176 டாஸ்மாக் கடைகள் வரை இயங்கி வருகின்றன. மாநகராட்சி பகுதியில் 55 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. டாஸ்மாக் கடைகளை ஒட்டியே பார்கள் செயல்படுகின்றன. பார்கள் ஏலத்தின் மூலமே எடுக்கப்பட்டது. கரோனா நோய்தொற்று காலங்களில் மூடப்பட்ட பார்கள் இன்றுவரை திறக்கப்படவில்லை. ஆனால் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.

திருச்சியில் பார் உரிமையாளர்கள் சங்கம் இரண்டு செயல்படுகிறது. ஒன்று மகாலிங்கம் தலைமையிலும் மற்றொன்று கரிகாலன் தலைமையிலும் செயல்படுகிறது. டாஸ்மாக் பார்களை பொருத்தமட்டில் பார்களுக்கான உரிமக் கட்டணம் அந்தந்த கடைகளின் மது விற்பனையில் 3% என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்தத் தொகையை மாநகரில் 1.8%, பேரூராட்சிகளில் 1.6%, கிராமப் பகுதிகளில் 1.4% என தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மாநகரில் இதுவரை ஆண்டுக்கு ரூ.3 லட்சம் செலுத்தியவர்கள் ரூ.1.80 லட்சம் செலுத்தி உள்ளார்கள். பார் கடைகளுக்காக மாதாந்திர வாடகையாக சுமார் 75 ஆயிரம் ஒவ்வொரு பார் உரிமையாளரும் வழங்கி வருகிறார்கள். ஒரு டாஸ்மாக் பாரில் குறைந்தது 10 பணியாளர்கள் வேலை செய்வார்கள். ஒவ்வொரு பணியாளருக்கும் தினமும் ரூபாய் 500 சம்பளமாக வழங்கப்படும். ஆனால் 7 மாதங்கள் கடந்த நிலையில் பார்கள் மூடப்பட்டிருப்பதால் பார் உரிமையாளர்கள் பணியாளர்கள் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் பார்களை திறக்கப்பட வேண்டும் என்பதே பார் உரிமையாளர்கள் சங்கத்தின் கோரிக்கையாக உள்ளது என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT