Advertisment

மேட்டூர் அணை திறப்பு எப்போது? வெளியான தகவல்!

When will the Mettur Dam open? Information released!

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை ஜூன் 12- ஆம் தேதி திறப்பது குறித்து, தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் ஆலோசனை கூட்டம்கடந்த 16 ம் தேதி நடைபெற்றது.

Advertisment

அந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், ''விவசாயிகள் வைத்த கோரிக்கைகள் அனைத்தையும் முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் செல்வோம். போதிய கால அவகாசம் இல்லாததால் தூர்வாரும் பணியை உடனே தொடங்க இருக்கிறோம்'' என தெரிவித்திருந்தார். அதேபோல் ''குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படும் தேதியை முதல்வர் விரைவில் அறிவிப்பார்'' என்றும் கூறியிருந்தார்.

Advertisment

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும் என விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பது பற்றி நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. மேட்டூர் அணையின் தற்போதைய நீர்மட்டம் 97.33 அடியாக உள்ள நிலையில் ஜூன் 12-இல் மேட்டூர் அணையை திறக்க வாய்ப்புள்ளதுஎன்ற ஒரு தகவலும் வெளியாகியுள்ளது.

Mettur Dam tngovt
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe