Skip to main content

'ஜாம்நகருக்கு கிடைத்த அங்கீகாரம் மதுரைக்கும் கிடைக்குமா?'-ஆனந்த் அம்பானி திருமண விழாவால் சர்ச்சை

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
nn

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்ச்சிக்கான கொண்டாட்டங்கள் குஜராத்தில் களைகட்டியுள்ளது. ஜாம்நகரில் இதற்கான ஏற்பாடுகள் பல மாதங்களுக்கு முன்பே செய்யப்பட்ட நிலையில் திரை பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் இந்த திருமணத்தில் கலந்து கொள்ள இருக்கின்றனர். உலகப்புகழ் பெற்ற ரிஹானாவின் இசை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

சிறுவயதில் இருந்தே பாட்டி செல்லமான ஆனந்த் அம்பானி அவர் திருமணத்தை பிறந்த ஊரான ஜாம்நகரில் வைக்க வேண்டும் என்ற சென்டிமெண்டால் அங்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இது அப்பா பிறந்த ஊர். சிறுவயதில் இங்கு வளர்ந்ததால் திருமணத்தை இங்கு நடத்த தீர்மானித்துள்ளோம் என ஆனந்த் அம்பானி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஜாம்நகர் விமான நிலையத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்காமல் இருந்த நிலையில், தற்போது சர்வதேச அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து பிரபலங்கள் அங்கு வர இருப்பதால், ஒரு திருமண நிகழ்விற்காகவே ஜாம்நகர் விமான நிலையத்திற்கு திடீர் சர்வதேச அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளதாக சர்ச்சைகள் எழுந்துள்ளது.

nn

இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் பல்வேறு கேள்விகளை வைத்துள்ளார். '10 நாள் திருமண கொண்டாட்டத்திற்காக ஜாம்நகர் விமான நிலையத்திற்கு சர்வதேச அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் மதுரை விமான நிலையத்திற்கு மட்டும் சர்வதேச அங்கீகாரம் வழங்காமல் மத்திய அரசு பாகுபாடு காட்டுவது ஏன்?' என எக்ஸ் வலைத்தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

அடுத்தடுத்து சிக்கிய போதைப் பொருட்கள்; பரபரப்பில் குஜராத்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Consequences of narcotics in Gujarat

குஜராத் மாநிலம் வழியாக இந்தியாவிற்கு அதிகளவில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குஜராத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். குஜராத்தின் அகமதாபாத்தில் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடங்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்தனர். அப்போது அங்கு இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட இதன் மதிப்பு சுமார் ரூ.300 கோடி எனப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மதிப்பிட்டுள்ளனர். 7 பேர் கைதான நிலையில், போதைப் பொருள் தயாரிப்புக் கும்பல் தலைவனின் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் என்றும் கூறப்படுகிறது.

நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.300 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

முன்னதாக குஜராத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி படகு ஒன்றில் இருந்து 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3 ஆயிரத்து 300 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும், இதே போன்று கடந்த மார்ச் மாதம் 12ஆம் தேதி  சுமார் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் இன்று குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே 602 கோடி ரூபாய் மதிப்புள்ள 86 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் இருந்து படக்கில் போதைப்பொருட்கள் கடத்தி வந்த 14 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்திய கடலோர காவல்படை, தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு இணைந்து போதைப்பொருள் கடத்தியவர்களை கைது செய்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மதுரையில் இளைஞர்கள் அட்டூழியம்; வெளியான சிசிடிவி காட்சிகள்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
madurai incident Released CCTV footage

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) சித்திரை திருவிழாவின் போது மது போதையில் இருந்த 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒத்தக்கடை பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்குவது, பெண்கள் மீது தாக்குதல் நடத்துவது, அப்பகுதியில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்குவது, வீட்டிற்கு வெளியே உள்ள இருசக்கர வாகனங்களைத் தள்ளிவிட்டு உடைப்பது, கடைகளை சேதப்படுத்துவது எனத் தொடர்ந்து அராஜகங்களில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இத்தகைய சூழலில் தான் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கான் முகமது கான், கடந்த 22 ஆம் தேதி இரவு தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சுந்தரம் நகர் பகுதியில் வந்துள்ளார். அப்போது இந்த இளைஞர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் கான் முகமது கான் பலத்த காயம் அடைந்தார். அதன் பின்னர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையே இந்த இளைஞர்கள் ஐயப்பன் நகர் பகுகுதியில் சென்று அங்குள்ள இரண்டு கடைகளை அடித்து நொறுக்கினர். மேலும் கடையில் இருந்த பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.