Advertisment

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது..? - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்!

j

தமிழகத்தில் கரோனா காரணமாக நடைபெறாமல் இருக்கின்ற 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எப்போது நடத்துவது என்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (01.06.2021) நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளி கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா ஆகியோர் கலந்துகொண்டனர்.

Advertisment

கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "இன்னும் சில தினங்களில் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்சி பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாக இருக்கிறது. இந்த அறிவிப்புக்குப் பிறகு, தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும்" என்றார்.

Advertisment

anbil mahesh +2 exams
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe