When is the Urban Local Government Election? - State Election Commission announces this evening!

Advertisment

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதியை இன்று (26/01/2022) மாலை 06.30 மணிக்கு அறிவிக்கிறது மாநில தேர்தல் ஆணையம். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்திக்கும் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் வெளியிடுகிறார்.தமிழ்நாட்டில் உள்ள 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் நேற்று (25/01/2022) கூறிய நிலையில், இன்று மாலை தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கு ஏற்கனவே தேர்தல் நடந்து முடிந்த நிலையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிப் பதவிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. ஏற்கனவே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகள் முடுக்கிவிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.