Advertisment

பொல்லானுக்கு எப்போது நினைவு மண்டபம்?

சுதந்திரப் போராட்ட வீரன் தீரன் சின்னமலை படைப்பிரிவில் பங்குபெற்று ஆங்கிலேயர்களால் சுட்டுக் கொல்லப்பட்டவர் பொல்லான்.

Advertisment

When is the memorial hall to Pollan?

கொங்கு மண்டலத்தில் 18 ம் நூற்றாண்டுகளில் வெள்ளையனை எதிர்த்து போராடியதில் தீரன் சின்னமலைக்கு பெரும்பங்குண்டு அப்படிப்பட்ட தீரன் சின்னமலை படை பிரிவில் பணியாற்றியவர்தான் இந்த பொல்லான். இவருக்கு அரசு சார்பில் விழாவும், பொல்லான் பிறந்த அரச்சலூர் அருகே உள்ள நல்ல மங்காபாளையத்தில் மணிமண்டபமும் கட்ட வேண்டுமென பொல்லான் வரலாறு மீட்பு குழு நீண்டகாலமாக போராடி வருகிறது.

இந்நிலையில் சென்ற மாதம் பொல்லான் நினைவுநாள்அரசு நிகழ்வாக அறிவிக்கப்பட்டது. ஆனால் பொல்லானுக்கு இதுவரை நினைவு மண்டபம் கட்டப்படவில்லை. இக்கோரிக்கையை வலியுறுத்தி நேற்றுஈரோட்டில் பொல்லான் வரலாறு மீட்புக் குழு அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்குழுவை சேர்ந்த வடிவேல் தலைமை வகித்தார். இதில் கலந்து கொண்ட ஏராளமானபேர் இந்த அரசு பொல்லானுக்கு நினைவு மண்டபம் கட்டுவதில் பாரபட்சமாக நடக்கிறது ஆகவே விரைந்து பொல்லானுக்கு மணிமண்டபம் கட்டி அவரது தியாகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டுமென கோஷமிட்டனர்.

memorial hall freedom fighter independence day. Erode
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe