When is the General Assembly? OPS-EPS Led Advice!

Advertisment

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் உயர்மட்டக்குழு ஆலோசனை தற்போது தொடங்கியுள்ளது. ஓபிஎஸ்-இபிஎஸ் தலைமையிலான ஆலோசனையில் அமைச்சர்களும், நிர்வாகிகள் உள்ளிட்டோரும்பங்கேற்றுள்ளனர். இந்த உயர்மட்டக் குழு ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை எப்போது நடத்தலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆலோசனைக்குப் பின் அதிமுக பொதுக்குழு கூட்டம்பற்றிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.