பள்ளிகள் திறப்பு எப்போது? அரசு தகவல்!

mn,

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக பள்ளிகள் பல மாதங்களாக மூடப்பட்டுள்ளன. மேலும், இந்த ஆண்டிற்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இதுவரை நடத்தப்படவில்லை. கரோனா தொற்று குறைந்த பிறகு நிச்சயம் 12ஆம் வகுப்பு தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்நிலையில், முழு ஊரடங்கு முடிந்த பிறகு பள்ளிகள் எப்போது திறக்கும் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று தமிழக தொடக்க கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார். பள்ளிகள் திறந்தவுடன் பாடப்புத்தகம் உள்ளிட்ட இதர நலத்திட்டங்கள் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

corona virus schools
இதையும் படியுங்கள்
Subscribe