Skip to main content

கல்லூரி ஆன்லைன் தேர்வுகள் எப்போது துவங்கும் - உயர்கல்வித்துறை அறிவிப்பு!

Published on 24/01/2022 | Edited on 24/01/2022

 

ுரப

 

கரோனா பரவல் காரணமாக போடப்பட்ட ஊரடங்கால் கல்லூரிகள் பல மாதங்கள் திறக்கப்படாமல் இருந்தன. வகுப்புகளும் தேர்வுகளும் இணையதளம் மூலம் நடந்தன. இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்துவருகின்றன. அதேபோல் தேர்வுகள் அனைத்தும் நேரடியாகவே நடைபெறும் என அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், கரோனா மூன்றாம் அலை இந்தியா முழுவதும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. தமிழகத்திலும் பாதிப்பு எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. 


இதன் காரணமாக பள்ளி ,கல்லூரி மாணவர்களுக்கு வரும் 31ம் தேதிவரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் வரும் பிப்ரவரி 1ம் தேதி முதல் மார்ச் 1ம் தேதி வரை ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு நேரடித் தேர்வு நடைபெறும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

''அது தவறுதான்...''- ஆறுதல் கொடுத்த அமைச்சரின் அறிவிப்பு! 

Published on 20/03/2022 | Edited on 20/03/2022

 

'' That's wrong ... '' - Minister's consolation announcement!

 

கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதியிலிருந்து மார்ச் 12 ஆம் தேதி வரை அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பி.இ, பி.டெக் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு தேர்வு துவங்கும் நிலையில் மதியம் 12.30 க்கும் விடைத்தாளைப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என பல்கலைக்கழகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இருந்தபோதிலும் ஒன்றரை மணிநேரம் கிரேஸ் டைமும் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தது.

 

கொடுக்கப்பட்ட நேரத்தை தாண்டியும் விடைத்தாளை பதிவேற்றம் செய்யாத மற்றும் கால அவகாசத்தை கடந்து விடைத்தாளை பதிவேற்றம் செய்த சுமார் 10,000 மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை என்பதை குறிக்கும் வகையில் 'ஆப்செண்ட்' என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆப்சென்ட் போடப்பட்டதால் 10,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. அதேபோல் தாமதமாக பதிவேற்றம் செய்யப்பட்ட விடைத்தாளை திருத்த வேண்டாம் என்று அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் விடைத்தாள் மதிப்பீட்டுக்கு வந்த பேராசிரியர்களிடம் முன்னரே அறிவுறுத்தி இருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்த தகவல் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருந்தது.

 

ponmudi

 

இந்நிலையில் 'தாமதமாக விடைத்தாளை பதிவேற்றம் செய்தற்கு ஆப்செண்ட் போடப்பட்டு இருந்தால் தவறு என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''தாமதமாக பதிவேற்றம் செய்த விடைத் தாள்களுக்கு ஆப்செண்ட் போடப்பட்டு இருந்தால் அது தவறானது. தாமதமாக பதிவேற்றம் செய்த விடைத்தாளும் திருத்தம் செய்யப்படும். அதேநேரம்  கல்வியின் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற அடிப்படையில் இனி நேரடி தேர்வுகள் மட்டுமே நடைபெறும். ஆன்லைன் தேர்வுகளால் கல்வியின் தரம் பாதிக்கப்படும் என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்'' என தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த தகவல் மாணவர்களுக்கு மகிழ்ச்சியையும், ஆறுதலையும் தந்துள்ளது.

 

 

Next Story

ஆன்லைன் தேர்வுக்கான வழிகாட்டுதல் வெளியீடு!

Published on 24/01/2022 | Edited on 24/01/2022

 

 

Guide to Online Exam Release!

 

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் செமஸ்டர் தேர்வு எழுதுவதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன.

 

அதன்படி, மாணவர்கள் இருந்த இடத்தில் இருந்தே தேர்வு எழுதும் 'Take Home' முறையில் தேர்வு நடைபெறும். செல்போன், லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்களைப் பயன்படுத்தி மாணவர்கள் தேர்வு எழுதலாம். விடைத்தாளில் பதிவு எண், பெயர், பாட குறியீடு உள்ளிட்ட தகவல்களை ஒவ்வொரு பக்கத்திலும் குறிப்பிட வேண்டும். அரியர் தேர்வு எழுதும் மாணவர்கள், இறுதியாகப் பயின்ற கல்லூரிகளைத் தொடர்புக் கொண்டு தேர்வு அனுமதிச் சீட்டை பெறலாம். கூகுள் கிளாஸ்ரூம் அல்லது மின்னஞ்சல் வழியாக வினாத்தாள்கள் அனுப்பப்படும்.

 

தேர்வு எழுதிய விடைத்தாள்களை அஞ்சல், கொரியர் மூலம் மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும்; நேரில் வந்து தர வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.