கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாகஐந்தாம் கட்ட ஊரடங்கு தமிழகத்தில் அமலில் உள்ள நிலையில், இன்று முதல் தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன்பேருந்துகள் இயக்கப்பட்டது. மேலும்சிலதளர்வுகளும்தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் மத வழிபாட்டு தலங்களை எப்போது திறக்கலாம் என்பது குறித்து சென்னை தலைமை செயலகத்தில், தலைமை செயலாளர் சண்முகம் தலைமையில் நாளை மறுநாள் சமயதலைவர்களுடன் ஆலோசனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல்பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள், அரசு உதவி பெறும் மற்றும் அரசு பள்ளி மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.