Advertisment

வாட்ஸ் அப்பில் வைரல்... ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட லஞ்சப் போலீஸ்...!!!

மாவட்ட குற்றப்பிரிவிலுள்ள போலீஸ் ஒருவர், லஞ்சம் வாங்கியதை பதிவு செய்த சக போலீஸ் அதனை வாட்ஸ் அப்பில் வைரலாக்க, லஞ்சம் வாங்கிய போலீஸ் தற்பொழுது ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Advertisment

bribe

ராமநாதபுரம் மாவட்டம், மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் ரைட்டராக பணியாற்றுபவர் போலீஸ்காரர் தர்மர். இதே மாவட்டம் சாயல்குடி பகுதியினை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் மீது நிலமோசடி தொடர்பான புகார் இருந்து வந்துள்ளது. தன் மீதுள்ள புகார் சம்பந்தமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமிலிருக்க, நேற்று 15/11/2019 அன்று மாவட்ட குற்றப்பிரிவு அலுவலக வாசலிலேயே ரைட்டர் தர்மரை சந்தித்து லஞ்சம் கொடுத்துள்ளார். இதனை சக போலீஸ்காரர் ஒருவர் காவல்துறைக்கு சொந்தமான நான்கு சக்கர வாகனத்திலிருந்தே தனது மொபைல் போனில் பதிவு செய்து, அதனை வாட்ஸ் அப்பில் பதிவிட, அந்த வீடியோ மாவட்டம் முழுமைக்கும் வைரலானது தகவலறிந்த மாவட்ட கண்காணிப்பாளர் வருண்குமார் லஞ்சம் வாங்கிய போலீஸ்காரர் தர்மரை ஆயுதப்படைக்கு பணி மாற்றம் செய்ய உத்தரவிட்டார். இதனால் மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் பரப்பரப்பு நிலவி வருகின்றது.

Advertisment

VIRAL
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe