கோவையில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைப்பதில் ஏற்பட்ட தகராறில் 9 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

WhatsApp Status Dispute...9 arrested

Advertisment

கோவை சிவானந்தபுரம் பகுதியைச் சேர்ந்த வீரபாண்டிக்கும் இவரது நண்பரான சின்னவேடம்பட்டி சேர்ந்த தனுஷ்குமார் என்பவருக்கும் இடையே வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைப்பதில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தகராறு ஒரு கட்டத்தில் முற்றிவிடவே தனுஷ்குமார் தன் நண்பர்களான மோகன்ராஜ், கார்த்திக், அருண், அஜித் குமார், சதீஷ்குமார், சந்தோஷ் குமார் ஆகியோரை துணைக்கு அழைத்து கத்தியால் குத்தியதில் வீரபாண்டி காயமடைந்தார்.

Advertisment

WhatsApp Status Dispute...9 arrested

இதனையடுத்து வீராபாண்டிக்கு ஆதரவாக சம்பவ இடத்திற்கு வந்த பிரசாந்த், வசந்தகுமார், கோபால கிருஷ்ணன் ஆகியோர் பதில் தாக்குதல் நடத்தி கத்தியால் குத்தியதில் தனுஷ்குமாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இருதரப்பினரிடையே ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தனுஷ்குமார், அருள், அஜத்குமார், சந்தோஷ்குமார், பிரசாந்த், வீரபாண்டி, வசந்தகுமார், கோபால கிருஷ்ணன் ஆகியோரை கைது செய்துள்ள சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த சம்பவத்தில் தப்பிய சதீஸ் மற்றும் கௌதம் ஆகியோரை தேடி வருகின்றனர்.