ரஜினி, அஜித் எனயார் அறிக்கைவிட்டாலும் பாஜகவுக்கு பாதகமில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
மக்களவைத் தேர்தலில் போட்டி இல்லை என்ற ரஜினியின் அறிக்கை எந்தவிதத்திலும் பாஜகவிற்கு பாதகத்தை ஏற்படுத்தாது.அந்த அறிக்கையை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக படிப்பதுதான்ஆச்சரியமாக இருக்கிறது. சில பேர் இது பாஜகவிற்கு எதிரான அறிக்கை, இது தமிழ்நாட்டில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த போவதில்லை என கூறிவருகின்றனர்.
எந்த அறிக்கை வந்தாலும் அது பாஜகவுக்கு எதிரான அறிக்கை என்று கூறி வருகின்றனர். அஜித் ஒரு அறிக்கை விட்டாலும் அது பாஜகவிற்கு எதிரான அறிக்கை தான் என்று நினைக்கிறார்கள். இப்படி எல்லாரையும் உருத்திகொண்டிருப்பது பாஜகதான்.
ஒரு யானையை நிறுத்திவிட்டு இது என்னவாகதெரிகிறதுஎன்று கேட்டால் ஒவ்வொருவரும் ஒரு பதில் சொல்வது போல ஒருவருடைய அறிக்கையை எப்படி எப்படி எல்லாம் உருவகப்படுத்த முடியுமோ அப்படி எல்லாம் உருவகப்படுத்துகிறார்கள் எனக் கூறினார்.