ADVERTISEMENT

''எது நடக்கப் போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்''- கிருஷ்ண ஜெயந்தியில் எடப்பாடி சூசகம்!

10:50 AM Aug 19, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

அதிமுகவில் ஜூன் 23ஆம் இருந்த நிலையே நீடிக்கும். எனவே ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்து பொதுக்குழுக் கூட்டம் நடத்தவேண்டும். தனிக்கூட்டம் கூடக்கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து ''கசப்புகளை மனதில் வைக்காமல் தூக்கி எறிந்துவிட்டு அதிமுகவின் வெற்றியே பிரதானம் என செயல்படலாம்'' என்று எடப்பாடி பழனிசாமிக்கு ஓபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் நேற்றைய தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் ''அவர் அடிக்கடி அழைப்பு கொடுப்பார். ஏற்கனவே தர்மயுத்தம் போனாரு.. யார எதிர்த்து போனாரு. இப்போ அவர்களுக்கும் ஒன்றாக சேர்ந்து செயல்படலாம் என்று அழைப்பு கொடுக்கிறார். அவருக்கு பதவி வேணும். பதவி இல்லாமல் இருக்க முடியாது. எங்கும் உழைப்பு கிடையாது ஆனால் பதவி மட்டும் வேணும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு பதவி வேணும் அதான் அவருக்கு முக்கியம். அன்று தலைமை கழகத்தை அடித்து நொறுக்கி ரவுடிகளுடன் வந்து ஆவணங்களை அள்ளிச் சென்றார் ஓபிஎஸ். அவருடன் எப்படி இணைவது'' என எடப்பாடி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் "எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது; எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது; எது நடக்கப் போகிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்” என்ற ஶ்ரீகிருஷ்ணரின் உபதேசத்தை மனதில் கொண்டு அனைத்து மக்களின் நன்மைக்கு உழைப்போம் என்று கிருஷ்ண ஜெயந்தி நன்னாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம்'' என சூசகமாக தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT