Advertisment

என்ன இருந்தாலும் எங்க மண்ணின் மைந்தரின் பிள்ளை! - ஸ்டாலினை கண்டு நெகிழ்ந்த திருவாரூர், திருக்குவளை மக்கள்!

styalin

கலைஞரின் சொந்த ஊரான திருக்குவளைக்கு சென்ற திமுக தலைவர் ஸ்டாலின் அங்கிருந்த வருகை குறிப்பேட்டில் கையொப்பம் இட்டுசென்றது அந்தபகுதி மக்களை நெகிழ்சியடைய செய்திருக்கிறது.

Advertisment

கலைஞர் மறைவுக்குப் பிறகு செயல் தலைவராக இருந்த ஸ்டாலின் திமுக தலைவர் ஆனார். அதனைத்தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கு சென்றுவரும் ஸ்டாலின், தலைவாரன முதல்பயணமாக திருவாரூர் வந்திருந்தார். காலை திருச்சி முக்கொம்பு அணையில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தவர். தஞ்சாவூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி வழியாக கலைஞரின் சொந்த ஊரான திருக்குவளைக்கு வந்தார். போகிற வழி நெடுகிலும் கண்ணில் பட்ட மக்களுக்கு கைக்கூப்பி வணங்கியபடியே சென்றார் ஸ்டாலின்.

Advertisment

திருக்குவளைக்கு செல்வதற்கு முன்னாள் எட்டுக்குடி, ஆலங்குடி பகுதிகளில் உள்ள வயற்காட்டில் சுட்டெரிக்கும் வெயிலில் விவசாயப் பணிகளை மேற்கொண்டிருந்த அப்பகுதி மக்களை கண்டதும் ஆனந்த பூரிப்புடன் காரில் இருந்து இறங்கி நலம் விசாரித்தார். வந்திருப்பது கலைஞரின் பிள்ளை ஸ்டாலின் என்பது தெரிந்து அங்கும் இங்கும் வேலைப்பார்த்துக் கொண்டிருந்த பெண்களும் ஓடோடி வந்து கைகூப்பி வணங்கி மகிழ்ந்தனர்.

stalin

திருக்குவளையில் உள்ள கலைஞரின் வீட்டிற்கு செல்லும் தெரு முனையிலேயே இறங்கி நடந்து சென்றார், அவருக்கு அக்கிராமத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். வீட்டிற்கு செல்லும் வழியில் இருந்த அவரது குலதெய்வம் கோயிலில் மேளம் நாதஸ்வரம் முழங்கின, அவர்களை பார்த்து கும்பிட்டப்படியே சென்றார், அந்த வழியில் வீட்டிற்கு அருகில் உள்ள பள்ளிக்குழந்தைகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக் கூறினர்.

பிறகு வீட்டிற்கு சென்றவர். அங்கிருந்த கலைஞரின் தாயர் அஞ்சுகத்தம்மாள், கலைஞர், முத்துவேலர் உள்ளிட்ட படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்தார். கலைஞரின் திரு உறுவப்படத்தின் அருகில் இருந்த வருகைப்பதிவேட்டில் ’’தலைவரின் பிறந்த ஊரான திருக்குவளைக்கு பலமுறை வந்துள்ளேன். தலைவருடன் வந்துள்ளேன். தனியாகவும் வந்துள்ளேன். இன்று திமுக தலைவராக வந்துள்ளேன். கழகத்தின் தலைவன் ஆனாலும் கூட தலைவர் கருணாநிதியின் தொண்டனாகவே அவரின் வழிபற்றியே என்னுடைய பயணம் தொடரும்’’ என்று எழுதி கையொப்பம் இட்டார்.

stalin

அங்கு 30 நிமிடங்கள் கட்சிக்காரர்கள், உறவினர்களோடு பேசியவர். அங்கிருந்து புறப்பட்டு திருவாரூர் அருகில் உள்ள காட்டூருக்கு சென்றார், அங்கு இருக்கும் கலைஞரின் தாயார் அஞ்சுகத்தம்மாளின் நினைவிடத்திற்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதன் பிறகு தெற்கு வீதியில் சன்னதி தெருவில் உள்ள அவரது அத்தையார் வீட்டிற்கு சென்றார். அங்கு மதிய உணவுவை முடித்துக்கொண்டு, மீண்டும் மன்னார்குடி வழியாக திருச்சிக்கு சென்றுள்ளார்.

ஸ்டாலின் கலைஞரோடும், தனியாகவும், கலைஞர் இறந்த பிறகு ஒரு முறையும் வந்திருக்கிறார், அப்போதெல்லாம் இல்லத மக்கள் ஆதரவு தலைவரானதும் கூடிவிட்டதை கண்ட மாற்றுக்கட்சியினர் என்னதான் இருந்தாலும் அவர் கலைஞரின் பிள்ளை என்பதை நிரூபித்துவிட்டார் என புலம்பியபடியே மலைத்து போய் நின்றனர்.

thirukuvalai Thiruvarur mk stalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe