Advertisment

'என்னாது தோனி இல்லையா?'- ரசிகர்கள் அதிர்ச்சி!

nn

மாமல்லபுரத்தில் சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் கடந்த 28/07/2022 தொடங்கி நடைபெற்ற நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான நிறைவு விழா இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது. மொத்தம் 11 சுற்றுகள் கொண்ட செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் 10 சுற்றுகள் முடிவடைந்த நிலையில் இன்று இறுதி சுற்றான 11வது சுற்று நடைபெற உள்ளது.

Advertisment

DHONI

இன்று மாலை நடைபெறும் இந்த நிகழ்வில் வெற்றி பெற்றோருக்குத் தங்கம், வெள்ளி, வெண்கலம் உள்ளிட்ட பதக்கங்களைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்க இருக்கிறார். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கிரிக்கெட் வீரர் தோனி கலந்துகொள்வார் என அழைப்பிதழில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று வெளியிடப்பட்டுள்ள அரசு விளம்பரங்களில் அவரது பெயர் இடப்பெறவில்லை. அதேபோல் சென்னை விமான நிலைய அட்டவணையில் தோனியின் வருகைக்கான தகவல்களும் வெளியாகாத நிலையில் அவர் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ளவில்லை என்ற தகவல் வெளியாகிஅவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe