What is the status of the projects? - Chief Minister MK Stalin is inspecting!

தமிழக அரசின் திட்டங்கள், சட்டப்பேரவை அறிவிப்புகள் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாட்கள் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.

Advertisment

சிறப்புத்திட்ட அமலாக்கத்துறையின் மூலம் நடத்தப்படும் ஆய்வுக்கூட்டம், வரும் ஜூன் 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெறும் கூட்டத்தில், அனைத்துத்துறைச் செயலாளர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்தக் கூட்டத்தில் தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் நிலை குறித்தும், சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்புகளின் நிலை குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்துத் துறைச்செயலாளர்களுடன் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.

Advertisment

நகராட்சி, நீர் வளம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை, மின்துறை, தொழில் துறை உள்ளிட்ட துறைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம், வரும் ஜூன் 1ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஜூன் 2ஆம் தேதி கூட்டுறவு மற்றும் உணவு, பள்ளிக்கல்வி, உயர்கல்வி, ஊரக வளர்ச்சி, சமூக நலத்துறை உள்ளிட்டதுறைகளின் செயலாளர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தவுள்ளார்.