தமிழகத்தில் கரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நேற்று என்றுமில்லாத அளவிற்கு ஒரே நாளில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தைகடந்துஇருந்தது.இன்றும்ஒரே நாளில்2,141 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் இன்றளவிலும் போதுமான அளவில் கரோனாபரிசோதனைகளை மேற்கொள்ளாததுஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.அதேபோல் பரிசோதனை விவரங்களை அரசு வெளியிட வேண்டும் என்றும்வலியுறுத்தியுள்ள ஸ்டாலின், பரிசோதனை விவரங்களை நாள்தோறும் வெளியிடுவதில் அரசிற்கு என்ன சங்கடம் எனகேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கரோனாவால் கடும் சவாலை தமிழகம் எதிர்கொண்டுள்ளதாக ஸ்டாலின் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.