தேனிக்கு பயணமாகும் 20 வாக்குபதிவு இயந்திரங்கள்... காரணம் என்ன?

திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து 20 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 30 விவிபேட் இயந்திரங்களும் தேனிக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

தேனில் இரண்டு வாக்குசாவடிகள் மட்டுமே மறுவாக்குப்பதிவு நடக்கும்என அறிவிக்கப்பட்டநிலையில் 20 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 30 விவிபேட் இயந்திரங்களும் கொண்டு செல்லப்படுகின்றன.

election

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

ஏற்கனவே அங்கு 50 பெட்டிகள் இருக்கின்ற நிலையில் 20 வாக்குபெட்டிகள்தேனிக்கு கொண்டு செல்லப்படுவது எதற்கு என எதிர்க்கட்சிகள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தேனியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர், ஈவிகேஎஸ் இளங்கோவன் மற்றும் அமமுக தேனி வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வன் ஆகியோர் இதில் சதி இருப்பதாகவும், ஓபிஎஸ் மகனை வெற்றிபெற வைக்கத்தான் இந்த சதி எனவும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

மேலும் இதற்கான காரணம் என்ன விளக்கம் என்று ஆணையத்திடம்கேட்க போவதாகவும்தெரிவித்துள்ளனர்.

election commission Theni
இதையும் படியுங்கள்
Subscribe