publive-image

Advertisment

தி.மு.க.வைச் சேர்ந்த சேலம் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், தனது தொகுதி மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், "வருகின்ற ஜூலை 18- ஆம் தேதி முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் துவங்க இருப்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். இந்த கூட்டத்தொடரில் ஒன்றிய அரசின் கொள்கைகளையும், திட்டங்களையும் மற்றும் அவர்களிடம் நீங்கள் கேட்க விரும்பும் துறை சார்ந்த கேள்விகளையும், எனது சேலம் நாடாளுமன்ற தொகுதி மேம்பாடு திட்டங்கள், அரசு பணிகள் குறித்து கேள்விகளையும் என்னுடைய மின்னஞ்சல்(Mail-id) [email protected] (அல்லது) மொபைல் எண் +91-73975- 05028 என்ற எண்ணிற்கு வாட்ஸ் ஆப் மூலம் தகவல் தெரிவித்தால் அவற்றை உங்களின் சார்பாக தொகுத்துமழைக்கால கூட்டத்தொடரில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி, ஒன்றிய அரசின் பதிலையும், அவற்றின் நிலைப்பாட்டையும் அறிந்து திட்டங்களை என நிறைவேற்றவும் நடவடிக்கைகள் எடுப்பேன். இதன்

மூலம் உறுதியளிக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.