Advertisment

எந்த நேரத்தில் பணியிடை நீக்கம் வருமோ? கலக்கத்தில் நகராட்சி ஊழியர்கள்!!

 At what point will the dismissal come? Municipal employees in turmoil

சிதம்பரம் நகராட்சியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பந்ததாரர்களுக்கு வைப்பு தொகை ரூ 10 லட்சம் வழங்கப்பட்டது,இதனை நகராட்சி ஊழியர்கள் ஒப்பந்ததாரர்களுக்கு இரண்டு முறை வழங்கியுள்ளனர். இந்த தகவல்தற்போது நடைபெற்ற கணக்கு தணிக்கையில் கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து இதற்கு சம்பந்தப்பட்ட ஊழியர்கள் கனிமொழி, அசோக்குமார் ஆகியோருக்கு நகராட்சி மண்டல இயக்குனர் பாஸ்கர் பணியிடை நீக்கம் ஆணை பிறப்பித்துள்ளார். இதனை சிதம்பரம் நகராட்சி ஆணையர் அஜிதாபர்வின் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு ஆணையை வழங்கியுள்ளார்.

Advertisment

இந்த நிலையில் சம்பவம் நடந்தபோதுபணியில் இருந்த நகராட்சி ஆணையர் சுரேந்தர்ஷா மேட்டூர் நகராட்சிக்கு மாற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்தில் நகராட்சி ஆணையர் உள்ளிட்ட மற்ற ஊழியர்களுக்கும் தொடர்பு உள்ளது என கூறப்படுகிறது. இதனால் நகராட்சியில் ஊழியர்கள் சிலர் எந்த நேரத்தில் பணியிடை நீக்கம் வருமோ? என்ற கலக்கத்தில் உள்ளனர்.

Advertisment

chithambaram district suspended
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe