“This is what makes RSS and BJP tick” - BFI Chennai Zonal President

Advertisment

பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் அலுவலகங்கள் மற்றும் அதன் நிர்வாகிகளின் வீடுகளில் என்.ஐ.ஏ அதிகாரிகளால் இன்று சோதனை நடத்தப்பட்டது.

பயங்கரவாதிகளுக்கு நிதி திரட்டுதல், தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆள் சேர்த்தல் மேலும் அவர்களுக்கு பயிற்சி அளித்தல் ஆகிய புகார்களின் அடிப்படையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று காலை 5 மணி முதல் இந்தியா முழுவதும் உள்ள பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா நிறுவனத்திற்கு சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் இந்திய அளவில் 106 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியா முழுவதும் என்.ஐ.ஏ அதிகாரிகளின் சோதனைகளை கண்டித்து பல்வேறு பகுதிகளில் மக்கள் போரட்டங்களை நடத்துகின்றனர்.

Advertisment

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் சென்னை மண்டலத் தலைவர் பக்கீர் முகமது, “பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா இஸ்லாமிய அமைப்பு என்பதைத் தாண்டி ஒட்டு மொத்த இந்தியர்களின் அமைப்பாக இன்று உருமாறி இருக்கிறது. இதுதான் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் கண்ணை உறுத்துகிறது.

மூன்று முதல் நான்கு மாததிற்கு முன்பு தான் இவர்கள் சோதனை இட்டனர். அப்போதும் எதும் கிடைக்கவில்லை. மீண்டும் மீண்டும் எங்கள் அலுவலகங்களை சோதனையிடுகின்றனர். இந்த சோதனையிலும் இவர்களுக்கு எதும் கிடைக்கப்போவதில்லை. ஏனென்றால் நாங்கள் மக்களுக்காக பாடுபடுகின்றோம்” எனக் கூறினார்.