Advertisment

சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் மகாவிஷ்ணு செய்த செயல்

 What Maha Vishnu did after coming out of prison

Advertisment

அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் ஆன்மீக போதனை நடத்திய வழக்கில் மகாவிஷ்ணு என்பவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் தனக்கு ஜாமீன் வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மகாவிஷ்ணு மனுத்தாக்கல் செய்திருந்தார். 'மாற்றுத்திறனாளிகளை புண்படுத்தும் வகையில் தான் பேசவில்லை. ஒருவேளை என்னுடைய பேச்சு அப்படி புரிந்துகொள்ளப்பட்டு புண்படுத்தி இருந்தால் அதற்காகநிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறேன். காவல்துறை விசாரணையில் முழு ஒத்துழைப்பு வழங்கினேன். எனவே தனக்கு ஜாமீன் வேண்டும்' அந்த மனுவில் எனக் கூறியிருந்தார்.

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு இந்த ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி மனுதாரர் மகாவிஷ்ணுவிற்கு நேற்று ஜாமீன் வழங்கிய உத்தரவிட்டார். இந்நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மகாவிஷ்ணு இன்று காலை தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். அப்பொழுது அங்கு வந்திருந்த சில ஆதரவாளர்கள் அவருக்கு மாலை அணிவித்தும், சால்வை அணிவித்தும் அவரை வரவேற்றனர். அப்பொழுது சிறார்கள் சிலரும் வந்திருந்தனர். அவர்கள் தலை மீது கை வைத்த மகாவிஷ்ணு கண்ணை மூடி ஆசீர்வாதம் வழங்கினார். அதேபோல் அங்கிருந்த பெண்கள் சிலர் மகாவிஷ்ணுவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினர்.

puzhal police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe