Advertisment

பட்டப்பகலில் பெண்ணுக்கு நேர்ந்த துயரம் ; அயனாவரத்தில் பரபரப்பு

A young man who tried to cut a woman in broad daylight

சென்னை அயனாவரம் பகுதியில் இளம்பெண் ஒருவரை இளைஞர் ஒருவர் வெட்ட முயன்ற சம்பவம் தொடர்பான காட்சிகள் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

சென்னை அயனாவரம் கே.எஸ் சாலையில் இளம்பெண் ஒருவருடன் இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். ஹோட்டலில் இருந்து பார்சல் வாங்கிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்பொழுது இளைஞர் ஒருவர் இவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தை வழிமறித்து அந்த இளைஞரை பட்டாக்கத்தியால் சாரா மாறியாக வெட்டத் தொடங்கியுள்ளார்.

Advertisment

அங்கிருந்த இளம்பெண் அதனைத் தடுக்க முயன்ற நிலையில் அவரையும் கையில் அந்த இளைஞர் வெட்டினார். உயிருக்கு பயந்து அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். இந்தச் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் அருகில் இருந்த கடைகளில் பதிவான நிலையில் அந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து அயனாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ayanavaram police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe