Advertisment

ஓடும் பேருந்தில் கையோடு வந்த கியர்; என்னதான் ஆச்சு கடலூர் தனியார் பேருந்துகளுக்கு; வைரலாக்கும் நெட்டிசன்கள்

 What happened to the private buses in Cuddalore? Viral netizens

கடந்த 19 ஆம் தேதி கடலூர் - விழுப்புரம் நெடுஞ்சாலையில் நெல்லிகுப்பம் அடுத்துள்ள பட்டாம்பாக்கம் பகுதியில் பயணிகளை ஏற்றிக்கொண்டு வந்த இரு தனியார் பேருந்துகள் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி நொறுங்கின. இதில் 5 பேர் உயிரிழந்த நிலையில் 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விபத்திற்குத்தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததோடு, உயிரிழந்தோர் மற்றும் காயமடைந்தோர் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவித்திருந்தார்.

Advertisment

 What happened to the private buses in Cuddalore? Viral netizens

தொடர்ந்து நேற்று மீண்டும் கடலூர் மாவட்டத்தில் ஒரு பேருந்து விபத்துக்குள்ளாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது. கடலூரில் இருந்து சிதம்பரம் சென்ற தனியார் பேருந்து பூண்டியாங்குப்பம் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் இறங்கி விபத்தில் சிக்கியது. இதில் ஒரு சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. முன்னர் நடந்த விபத்திற்கும் அதிவேகம்தான் காரணம் எனக் கூறப்பட்ட நிலையில் இந்த விபத்திற்கும் அதிவேகம்தான் காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

Advertisment

nn

இந்த நிலையில், அதே கடலூரில் தனியார் பேருந்து ஒன்றின் கியர் கம்பி,கையோடு கழன்று வந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பண்ருட்டியில் இருந்து கடலூர் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்பொழுது நெல்லிக்குப்பம் பகுதி அருகே சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநர் பேருந்து கியரை மாற்ற முயன்றுள்ளார். அப்பொழுது கியர் ராடு கையோடு பிடுங்கிக் கொண்டு வந்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாகச் சாலையில் சென்றது. ஒருவர் கட்டையை வைத்து முட்டுக்கொடுத்து கியரை போட்டவாறு பேருந்து ஓட்டுநருக்கு உதவி செய்தார். பேருந்தில் பயணிகள் யாரும் இல்லை எனினும் இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'என்னதான் ஆச்சு கடலூர் தனியார் பேருந்துகளுக்கு' என நெட்டிசன்கள் இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

accident Cuddalore
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe