Skip to main content

காஞ்சி சங்கரமடத்துக்குள் என்ன தான் நடக்குது?

Published on 18/05/2019 | Edited on 18/05/2019

காஞ்சி சங்கரமடத்துக்குள் முன்பு நடந்த சம்பவம் ஒன்று அதாவது, சங்கரமடத்தில் மகா பெரியவர்னு சொல்லப்பட்ட சந்திரசேகரேந்திர சரஸ்வதிக்கு 90-களில் கனகாபிஷேக விழா நடந்தது. ஜெயேந்திரர் முன்னின்று நடத்திய இந்த விழாவில், சசிகலாவோடு ஜெ.வும் கலந்துக்கிட்டார். இதில் இளைய மடாதிபதியான விஜயேந்திரர் நிறைய முறைகேடுகள் செய்யறதா, மடத்துக்கு நெருக்கமான ஆடிட்டர் குருமூர்த்தி, ஆடிட்டர் ராதாகிருஷ்ணன், பின்னாளில் கொலை செய்யப்பட்ட சங்கரராமன் ஆகியோர் புகார் செஞ்சாங்க.  விஜயேந்திரரும் ஆடிட்டர் குருமூர்த்தியும் விழா அன்னைக்கு ஒருமையிலே திட்டிக்கிட்டாங்க.

 

kanchisankara



அப்ப விஜயேந்திரருக்காக வரிஞ்சுகட்டியவர் ஜெயேந்திரர். ஆடிட்டர் குருமூர்த்தியைப் பார்த்து, ’முதல்ல நீ மடத்தை விட்டு வெளியே போ’ன்னு சத்தம் போட்டிருக்கார். இதனால் மேலும் கோபமடைந்த ஆடிட்டர் குருமூர்த்தி, விஜயேந்திரரைப் பார்த்து, ’உன் வண்டவாளம் முழுதையும் அம்பலமாக்குவேன்னு எச்சரிச்சாராம். இப்ப அந்த பவரைக் காட்டுறதாலதான், சங்கரமடத்தில் சங்கடம்னு சொல்றாங்க.அப்படி என்ன சங்கடம் என்று விசாரித்தபோது,பழைய சண்டைக்குப் பிறகு, மடத்துப் பக்கமே போகாம இருந்த ஆடிட்டர் குருமூர்த்தி, ஜெயேந்திரர் மரணத்துக்கு அப்புறம்தான் அங்கே போனாரு. 
 

gurumurthy



இப்ப சங்கரமடத்தின் சர்வ அதிகாரங்களும் ஆடிட்டர் குருமூர்த்தி கையிலதான். மடத்தோட கணக்கு வழக்குகள் தொடங்கி எல்லாமும் அவரே பார்த்து வருவதாகவும் செய்திகள் வருகின்றன.விஜயேந்திரரையும் தன் விருப்பப்படி ஆடிட்டர் இப்ப ஆட்டிவைக்க ஆரம்பிச்சிட்டார்னு மடத்து ஆட்களே சொல்றாங்க. இதிலே இன்னொரு விவகாரமும் உண்டு. தோண்டத் தோண்ட பூதம் கிளம்பும் போலத் தெரியுதே என்று மேலும் இது பற்றி விசாரித்தபோது, கௌரி காமாட்சிங்கிற பெண்மணி, திருவனந்தபுரத்தில் மடத்துக்குச் சொந்தமான ஒரு மருத்துவக் கல்லூரியை நடத்திக்கிட்டு வர்றாராம். இப்ப அந்தக் கல்லூரியை ஒப்படைக்கணும்னு ஆடிட்டர் தரப்பு அந்தப் பெண்மணியை மிரட்டியதாம். 

அந்த மிரட்டல்களை எல்லாம் அப்படியே ஆடியோவாகப் பதிவுசெய்து வைத்திருக்கிறாராம் கௌரி காமாட்சி. ஜெயேந்திரர்தான் கௌரியிடம் கல்லூரி நிர்வாகத்தை ஒப்படைத்தார்னு சொல்லும் மடத்து தரப்பு,  கௌரிக்கு கல்யாணம் பண்ணி வைப்பதில் ஜெயேந்திரர் காட்டுன அக்கறையையும் ஞாபகப்படுத்துறாங்க. கௌரிக்கு இப்ப நெருக்கடியான சூழல்னு சொல்றாங்க.
 

சார்ந்த செய்திகள்

Next Story

“பாசிஸ்டுகளை வீழ்த்துவதற்கு உறுதி ஏற்றோம்” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Let's vow to defeat the fascists  Minister Udayanidhi Stalin's

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதே போன்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (24.03.2024) மாலை திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு வண்ணாங்கோயில் என்ற இடத்தில் இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் முதல் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை தொடங்கியுள்ளார்.

இந்நிலையில், காஞ்சிபுரத்தில் தி.மு.க. வேட்பாளார் செல்வத்தை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், “ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு. எனவே ஏப்ரல் 17 ஆம் தேதி வரை தேர்தல் பிரச்சாரம் செய்யலாம். தி.மு.க. தொண்டர்கள் பொறுப்பேற்று பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். ஜுன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை. ஜூன் 3 ஆம் தேதி கலைஞரின் 100 ஆவது பிறந்த நாள் முடிந்து 101 வது பிறந்த நாளில் அடியெடுத்து வைக்கிறார். நாம் அவருக்கு கொடுக்க கூடிய பரிசாக 40 க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற்று, நாம் கை காட்டுபவரே அடுத்த பிரதமராக வர வேண்டும்” எனப் பேசினார்.

Let's vow to defeat the fascists  Minister Udayanidhi Stalin's

முன்னதாக காஞ்சிபுரத்தில் பிரச்சாரத்தை தொடங்கும் முன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேரறிஞர் அண்ணா இல்லத்திற்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கு வைக்கப்பட்டிருந்த பார்வையாளர்கள் பதிவேட்டில், “பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சி இல்லத்தில் இருந்து ‘மாநில உரிமைகளை மீட்க தலைவரின் குரல்’ 2 ஆம் கட்ட நாடாளுமன்ற பிரச்சாரப் பயணத்தை துவக்குவதில் பெருமை கொள்கிறோம். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் புகழ் ஓங்குக. தலைவர் தலைமையில் திராவிட மாடல் அரசு வெல்லட்டும். பாசிசம் ஒழியட்டும். BELONG TO THE DRAVIDIAN STOCK” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “மாநில சுயாட்சியின் உரிமைக்குரல் நம் அண்ணாவின் மண்ணில், பாசிஸ்டுகளை வீழ்த்துவதற்கு உறுதி ஏற்றோம்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

மீன்வளப் பல்கலைக்கழகம்; ஜெயலலிதாவின் பெயரை நிராகரித்த குடியரசுத்தலைவர்

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
President rejects Jayalalitha name for Fisheries University

நாகை மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா பெயரை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை குடியரசு தலைவர் நிராகரித்து விட்டார்.

நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வளப் பல்கலைக்கழகம் கடந்த 2012 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சியின் போது நாகப்பட்டினத்தில் துவங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைந்த பிறகு நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வள பல்கலைக்கழகத்திற்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என்று  சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஓப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் 4 ஆண்டுக்கும் மேல் ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் வைத்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு கிடப்பில் போடப்பட்ட 10 மசோதாக்களுடன் ஜெயலலிதா பெயர்மாற்றம் தொடர்பான மசோதவையும் திருப்பி அனுப்பியிருந்தார். இதையடுத்து தமிழக அரசு மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு ஜெயலலிதாவின் பெயர் வைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, மீண்டும் ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. இந்த மசோதாவை ஆளுநர் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்திருந்தார்.

இந்த நிலையில் நாகப்பட்டினம் மீன்வளப் பல்கலைகழகத்திற்கு ஜெயலலிதா பெயர் மாற்றம் தொடர்பான பரிந்துரையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நிராகரிப்பதாக அறிவித்துள்ளார்.