Skip to main content

மது அருந்துவோருக்கு அரசு செய்து தரவேண்டியவை; சுயேட்சை வேட்பாளரின் அட்ராசிட்டி

Published on 27/03/2023 | Edited on 27/03/2023

 

Rs.2500 fine for liquor sellers; An independent petition contested in Erode East

 

உயிரிழப்பை தடுக்க மது அருந்துவோருக்கு வாகன வசதி செய்து கொடுக்க வேண்டும் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

 

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் டி.ஆர்.ஓ. சந்தோஷினி சந்திரா தலைமையில் நடைபெற்றது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மக்கள் தங்களது குறைகள் குறித்த மனுக்களை அவரிடம் வழங்கினர். அப்போது தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆறுமுகம் வந்து மனு கொடுத்தார்.

 

அதில் அவர் கூறியிருப்பதாவது, “தமிழ்நாட்டில் டாஸ்மாக் பார்களில் டாஸ்மாக் மதுபானங்களை குடித்து விட்டு வாகனங்களில் செல்லும் மது பிரியர்களுக்கு போலீசார் ரூ.10,000 அபராதம் விதிக்கின்றனர். குறிப்பிட்ட நாட்களுக்குள் அந்த அபராத தொகையை செலுத்தத் தவறினால், பறிமுதல் செய்த வாகனங்களை போலீசார் ஏலம் விட்டு தொகை வசூலிக்கப்படுகிறது. எனவே மது பிரியர்கள் இதை அறிந்து கொள்ளும் வகையில் ஒவ்வொரு டாஸ்மாக் பார்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேனர் வைத்திட வேண்டும்.  அதேபோல் டாஸ்மாக் மது குடித்துவிட்டு வாகனங்கள் ஓட்டுபவர்களுக்கு 10 ஆயிரம் அபராதம் விதிப்பது போல் அதற்கு உடந்தையாக இருக்கும் டாஸ்மாக் மதுவிற்ற ஊழியர்கள், மற்றும் பார் நடத்துபவர்களுக்கு தலா ரூ.2,500 அபராதம் விதிக்க வேண்டும். மேலும் மது அருந்திவிட்டு செல்பவர்கள் சில நேரம் விபத்தில் சிக்கி உயிரிழக்கவும் நேரிடுகிறது. இதனை தடுக்கும் வகையில் அரசை மது பிரியர்களுக்கு என்று தனியாக வாகன வசதி செய்து கொடுக்க வேண்டும்” என ஆறுமுகம் அந்த மனுவில் கூறியுள்ளார்.

 

ஆறுமுகம் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு தொகுதியில் மது சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பக்கெட்டுக்குள் தவறி விழுந்து 9 மாத குழந்தை உயிரிழப்பு

Published on 18/06/2024 | Edited on 18/06/2024
A 9-month-old baby lose their live after falling into a bucket

கோபிசெட்டிபாளையம் அருகே தண்ணீர் பக்கெட்டுக்குள் தவறி விழுந்து 9 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், அலகாபாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பீம்(35). இவரது மனைவி ரீமா(32). இவர்களுக்கு ரோஷினி, ரட்சனா, ராணி, அமித் மற்றும் ராசி (9 மாத கைக்குழந்தை) இருந்தனர். இவர்கள் அனைவரும் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கெட்டிசெவியூர், பள்ளிபாளையத்தில் உள்ள தனியார் மில் குடியிருப்பில் தங்கி கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை கணவர் பீம் பால் வாங்குவதற்காக வெளியே சென்றுவிட்டார். வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகள் மட்டும் இருந்துள்ளனர். அப்போது துணிகளை துவைப்பதற்காக மனைவி ரீமா பிளாஸ்டிக் பக்கெட்டில் தண்ணீருடன் சோப்பு பவுடரை கலந்து வைத்துவிட்டு வீட்டிற்குள் சமையல் வேலை செய்து கொண்டிருந்தார். குழந்தை ராசி வீட்டிற்கு வெளியே இருந்துள்ளது. பின்னர் சமையல் வேலையை முடித்து விட்டு ரீமா வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தார்.  அப்போது குழந்தை ராசி சோப்பு தண்ணீர் பக்கெட்டிற்குள் தலைகீழாக விழுந்து கிடந்தது தெரியவந்தது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ரீமா ஓடிச் சென்று  குழந்தையை தூக்கிய போது குழந்தை பேச்சு மூச்சு இன்றி இருந்தது. பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியோடு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் கோபிசெட்டிபாளையம்  அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்தை இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்து சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

சுழலில் சிக்கிய தம்பி-அண்ணன் கண் முன்னே நடந்த சோகம்

Published on 18/06/2024 | Edited on 18/06/2024

 

 

Tragedy happened in front of the eyes; brother trapped in the whirlpool

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம், டி.எம்.கல்யாண நகரைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவருக்கு திருமணமாகி கார்த்திக் ராஜா, சுர்ஜித் (26) என இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் சுர்ஜித் ஈரோட்டில் உள்ள தனியார் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் நேற்று கார்த்திக் ராஜா, சுர்ஜித், அவரது நண்பர் சதீஷ் ஆகியோர் குமாரபாளையத்தில் சினிமா பார்க்க கிளம்பிச் சென்றனர். காலை காட்சி பார்க்க முடியாததால் மதியம் காட்சி பார்க்க முடிவு செய்தனர். இதனையடுத்து அவர்கள் மூன்று பேரும் பவானி, லட்சுமி நகர், பவிஸ் பார்க் அருகே உள்ள காவிரி ஆற்றில் குளிக்க முடிவு செய்து சேலம் -கோவை பைபாஸ் பாலத்திற்கு அடியில் காவிரி ஆற்றின் மேற்புற கரை ஓரமாக குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது சுர்ஜித் திடீரென சுழலில் சிக்கி நீரில் மூழ்கினார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கார்த்திக் ராஜா மற்றும் சதீஷ் ஆகியோர் கத்தி கூச்சலிட்டனர்.இது குறித்து பவானி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் காவிரி ஆற்றில் இறங்கி சுர்ஜித்தை தேடினர். சிறிது நேரத்தில் சுர்ஜித் உடல் மீட்கப்பட்டது. பின்னர் அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணன் கண் முன்னே தம்பி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.