மக்களின் அடிப்படை தேவைகளைக் கூட செய்யவில்லையெனில் அதிகாரிகள் என்னதான் செய்கிறார்கள்?-நீதிமன்றம் கேள்வி

madurai

மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்யவில்லை என்றால் அதிகாரிகள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

மதுரை மாநகராட்சி நிர்வாகம் மதுரை 76வது வார்டில் மக்களுக்கு அடிப்படைத் தேவையான எந்த வசதிகளும் செய்து தரவில்லை என வழக்கு ஒன்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கான பிரச்சனைகளைக் கூட சரி செய்து கொடுக்கவில்லை என்றால் அதிகாரிகள் என்னதான் செய்கிறார்கள் எனக் கேள்வி எழுப்பினர். மனுதாரர் குறிப்பிட்டுள்ள 76வது வார்டில் கழிவுநீர் பிரச்சினைகள், சாலைவசதி உள்ளிட்டவற்றை ஒரு வாரத்தில் சரிசெய்து கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். அப்படி சரி செய்து கொடுக்கவில்லை எனில் மதுரை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராகி தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

highcourt madurai
இதையும் படியுங்கள்
Subscribe