ஸ்டெர்லைட் ஆலை தொடங்குவதற்கு யார் காரணம் என்பது பற்றி சட்டமன்றத்தில் ஒரு நாள் முழுக்க விவாதிக்க திமுக தாயர், முதலமைச்சர் தயாரா என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்த நிலையில் ஒரு ஆண்டு முழுவதும் விவாதிக்க தயார் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பதில் தெரிவித்துள்ளார்.

மீன்வளத்துறைக்கான மானிய கோரிக்கை இன்று சட்டப்பேரவையில் விவாதத்துக்கு வரவுள்ள நிலையில், அவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

Advertisment

தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை பரிக்கொடுத்தது திமுக தான். ஸ்டெர்லைட் ஆலை தொடங்குவதற்கு யார் காரணம் என்பது பற்றி சட்டமன்றத்தில் ஒரு நாள் முழுக்க அல்ல. ஒரு ஆண்டு முழுவதும் விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம். ஸ்டாலினுக்கு மடியில் கனம் இருக்கிறது அதனால் தான் எப்போதும் பயம், பயம் என்ற அடிப்படையில் சமாளிக்க முடியாமல் திணறுகிறார். ஏனெனில் தமிழகத்தின் துரோகத்தின் மறு உருவம் என்று சொன்னால் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் என்று சொல்லலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.