ADVERTISEMENT

மரம்வெட்டிகள் என்னவானார்கள்? –எண்கௌண்டர் செய்யப்போகிறதா ஆந்திரா போலிஸ்?

08:25 PM Dec 14, 2018 | raja@nakkheeran.in

ஆந்திரா மாநிலத்தில் உள்ள சேஷாச்சலம் வனப்பகுதியில் செம்மரங்கள் வளர்ந்து நிற்பது தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்ட்டிரா கடத்தல்காரர்கள் அறிந்ததே. இந்த செம்மரங்கள் ரகசியமாக கடந்த 15 ஆண்டுகளாக வெட்டி கடத்தப்படுகிறது. இதனை தடுக்க ஆந்திரா அரசு பல முயற்சிகளை எடுத்தும், மரம் வெட்டுபவர்களை எண்கௌண்டர் செய்து 25க்கும் மேற்பட்டவர்களை கொன்றும், கடத்தல் கும்பல்கள் இரண்டாம் கட்ட தலைவர்கள், புரோக்கள் நூற்றுக்கணக்கானவர்களை கைது செய்தும் செம்மர கடத்தலை தடுக்க முடியவில்லை.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்நிலையில் கடந்த டிசம்பர் 12ந்தேதி இரவு ஸ்ரீவாரிமொட்டு என்கிற பகுதியில் சிந்தமாலுபண்டா என்கிற இடத்தில் போலிஸார் ரோந்து சென்றபோது, காட்டுக்குள் மரம் வெட்டும் கும்பல் மரங்களை எடுத்துக்கொண்டு சென்றது. இதனைப்பார்த்து அதிர்ச்சியான அவர்கள் செம்மரம் கடத்தல் தடுப்பு பிரிவு போலிஸாருக்கு தகவல் தெரிவிக்க ஐ.ஐீ காந்தாராவ், டி.எஸ்.பி ரமணண்ணா போன்றவர்கள் சம்பவயிடத்துக்கு வந்து எச்சரிக்கை செய்தோம், அவர்கள் எங்களை நோக்கி கற்களை வீசி தாக்கினார்கள். நாங்கள் பதிலுக்கு வானத்தை நோக்கி இரண்டு முறை துப்பாக்கி சூடு நடத்தினோம். அவர்கள் சிதறி ஓடினார்கள். ஒருவனை மட்டும் பிடித்துள்ளோம். அவன் தருமபுரியை சேர்ந்த குமார் என்பதும், அவனிடம் விசாரித்தபோது, 40 பேர் மரம் வெட்ட வந்தோம் எனக்கூறியுள்ளான். சிதறி ஓடியவர்களை தேடிவருகிறோம் என்றுள்ளனர்.

இதுதான் மனித உரிமை ஆர்வலர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதிரடிப்படை இப்படித்தான் ஒருகதையை ஜோடிக்கும். எங்களுக்கு வந்த தகவல்படி மரம் வெட்டி வாகனத்தில் ஏற்ற காத்திருந்தபோது சுற்றி வளைத்துள்ளது. அதில் சிலர் தப்பி ஓடியுள்ளனர். பலர் பிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களை அடித்து உதைத்து தகவல்களை பெறுவதற்காக கணக்கு காட்டாமல் வைத்துள்ளனர். பின்னர் கணக்கு காட்டுவார்கள் என்றவர்கள். கடந்த காலத்தை போல மரம் வெட்ட வந்த கூலி தொழிலாளர்கள் யாரையும் ஆந்திரா போலிஸ் சுடாமல் இருக்க வேண்டும், அதற்காக முயற்சி செய்துக்கொண்டுயிருக்கிறோம் என்கிறார்கள் மனித உரிமை ஆர்வல அமைப்பினர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT