தமிழகத்தில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு தேர்தல் களம் சூடு பிடித்திருக்கும் நிலையில்,கடந்த ஞாயிற்றுக்கிழமை (07.03.2021) திருச்சியில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டத்தில்திமுக தலைவர் ஸ்டாலின், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இந்நிலையில் தமிழக முதல்வரும்,அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,500 ரூபாய் வழங்கப்படும் என சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது தெரிவித்துள்ளார். அதிமுக அறிவிக்க இருந்தது முன்கூட்டியே கசிந்துவிட்டதால் திமுக அதை அறிவித்துவிட்டது என்றார்.
மேலும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் எனவும்எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.