Skip to main content

மேற்கு மாவட்டங்களுக்கு விலையில்லா கறவை பசுக்கள் வழங்கும் திட்டம்

Published on 19/07/2018 | Edited on 19/07/2018

 

ud

 

விலையில்லா கறவை  பசுக்கள் வழங்கும் திட்டத்தை கடந்த 6 ஆண்டுகளுக்கு பிறகு மேற்கு மாவட்டங்களுக்கு விரிவுப்படுத்தப்படவுள்ளதாக கால்நடைகள் மற்றும் பராமரிப்புத்துறை  அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

 

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூடிய விரைவில் 77,000  கிராமப்புற ஏழை, எளிய மற்றும் பெண்களுக்கான நாட்டுக்கோழி வழங்கும் திட்டத்தை ரூ. 50 கோடி மதிப்பில் விரைவில் முதல்வர் துவக்கி வைப்பார் என்றார். மேலும், இந்தாண்டு 1.5 லட்சம் பேருக்கு விலையில்லா ஆடுகள் மற்றும் 15 ஆயிரம் பேருக்கு கறவை பசுக்கள் வழங்கப்படவுள்ளதாக அறிவித்தவர்,  அடுத்த மாதத்தில் இருந்து இந்த பணிகள் துவங்கப்படும் என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

பண மோசடி புகார்... ‘உன்னை யார் என்றே எனக்கு தெரியாது’ - அலுவலக உதவியாளரை வெளியே அனுப்பிய முன்னாள் அமைச்சர்!

Published on 10/08/2021 | Edited on 10/08/2021

 

Money Laundering Complaint ... ‘I Don’t Know Who You Are’ - Minister who sent out office assistant

 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள ஏ.ஆர். பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன் (42). அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று (09.08.2021) பரபரப்பு புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அதில் தெரிவித்திருப்பதாவது, “நான் கடந்த 20 ஆண்டுகளாக கால்நடைத்துறை முன்னாள் அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணனிடம் அலுவலக உதவியாளராகப் பணிபுரிந்துவந்தேன். கடந்த 2018ஆம் ஆண்டு கால்நடைத்துறையில் அலுவலக உதவியாளர் மற்றும் ஆய்வக உதவியாளர் ஆகிய அரசுப் பணிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய சுற்றறிக்கை வந்தது.

 

இந்த வேலைக்கு உனக்குத் தெரிந்தவர்கள் இருந்தால் சிபாரிசு செய், வாங்கித் தருகிறேன் என்று உடுமலை கே. ராதாகிருஷ்ணன் கூறினார். அதன்படி எனக்குத் தெரிந்தவர்கள் பலரிடம் இந்த வேலைக்காக ஐந்து லட்சம் ரூபாய் முதல் ஏழு லட்சம் ரூபாய் வரை வசூல் செய்து ஒன்றரை கோடியை உடுமலை கே. ராதாகிருஷ்ணனிடம் கொடுத்தேன். அவர் அந்தப் பணத்தை அவரது பினாமியாக செயல்பட்ட டி. ரமேஷ் என்பவரிடம் கொடுக்கச் சொன்னார். நானும் அந்தப் பணத்தை ரமேஷிடம் கொடுத்தேன். இதற்கிடையில் கோர்ட் உத்தரவுப்படி கால்நடைத்துறையில் அறிவிக்கப்பட்ட அலுவலக உதவியாளர், ஆய்வக உதவியாளர் வேலைக்கு ஆள் எடுக்கும் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

 

இதனால் வேலைக்குப் பணம் கொடுத்தவர்கள் என்னிடம் திருப்பிக் கேட்டனர். இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டது. நான் கொடுத்த பணத்தைத் திருப்பி கேட்டப்போது, உடுமலை கே. ராதாகிருஷ்ணன் என்னை வெளியில் அனுப்பிவிட்டார். ‘உன்னை யார் என்றே எனக்குத் தெரியாது’ என்று சொல்லிவிட்டார். அவரது பினாமியான ரமேஷிடம் பணத்தைக் கேட்டபோது, அவர் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார். நான் இந்த விஷயத்தில் ஒரு பைசா கூட எடுக்கவில்லை. வசூலித்த பணத்தை அப்படியே ரமேஷிடம் கொடுத்துவிட்டேன். இது தொடர்பாக உடுமலை ராதாகிருஷ்ணன், அவரது பினாமி ரமேஷ் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.

 

 

Next Story

கத்திமுனையில் அமைச்சரின் உதவியாளர் கடத்தல்... திருப்பூரில் பரபரப்பு!! 

Published on 23/09/2020 | Edited on 23/09/2020
INCIDENT IN THIRUPUR

 

 

திருப்பூரில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

திருப்பூர் உடுமலைப்பேட்டையில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கர்ணன் என்பவரை 4 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்றுள்ளனர். முக கவசம் அணிந்து இருந்த அந்த நபர்கள் அவரை கத்தி முனையில் மிரட்டி காரில் ஏற்றி கடத்தி சென்ற காட்சிகள் அங்கிருந்த சி.சி.டி.வியில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து காவல் கண்காணிப்பாளர் திஷா மிட்டல் நேரில் விசாரணை நடத்தி வருகிறார். 

 

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் உள்ள சட்டமன்ற அலுவலகத்தின் வாசலிலேயே இந்த கடத்தல் சம்பவம் நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.