Skip to main content

80 சவரன் நகையை நாடகமாடி கொள்ளையடித்த வடமாநில இளைஞர் கைது.

Published on 30/06/2019 | Edited on 30/06/2019

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் பஜார் பகுதியில் நகை கடை நடத்தி வருபவர் சந்தோஷ் சந்த். இவரிடம் மேற்குவங்கம் மாநிலத்தை சேர்ந்த ஷேக் சதாம் உசேன் என்பவர் சில ஆண்டுகளாக பணிப்புரிந்து வந்தார்.  கடந்த மே 1 ஆம் தேதி நகை பட்டறையில் நகைகளை பராமரித்து வந்த ஷேக் சதாம் உசேன் 80 சவரன் நகையுடன் மாயமானார். இதில் அதிர்ச்சியான சந்தோஷ் சந்த், வாணியம்பாடி நகர போலீசில் சந்தோஷ் தந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வாணியம்பாடி துணை கண்காணிப்பாளர் முரளி தலைமையில் தேடி வந்தனர். விசாரணையில் மேற்கு வங்காளம் பகுதியில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து ஆய்வாளர் சந்திரசேகர் உதவி ஆய்வாளர் நாகராஜ் மற்றும் தலைமை காவலர் நாசர் ஆகியோர்  மேற்கு வங்காளம் பகுதி சென்று பதுங்கி இருந்த ஷேக் சதாம் உசேனை கைது செய்து வாணியம்பாடி அழைத்து வந்தனர்.

 

 

west bengal state thief youth arrested for robbing 80 shaving jewelery vellore,vaniyambadi police

 

 

 

--LINKS CODE------

அதைத் தொடர்ந்து அவரிடம் இருந்த 80 சவரன் நகையை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். இந்த தகவலால் வெளிமாநிலத்தில் இருந்து வேலைக்கு வந்துள்ள தொழிலாளர்களின் ஆதார்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை நகல்கள் வாங்குகின்றனர் வேலைக்கு வைத்திருக்கும் வாணியம்பாடி, ஆம்பூர் பகுதியில் தொழில் செய்யும் முதலாளிகள்.

 

 

 

சார்ந்த செய்திகள்