Skip to main content

’’இந்தத்துப்பாக்கியிலதான் உன்னை சுடப்போறோம் ” - தொடரும் சித்திரவதை!

Published on 25/06/2018 | Edited on 25/06/2018

 

tho


உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தூத்துக்குடி மாவட்டப்  போலீசால் தொடரும் சித்திரவதை குறித்தும், அதற்குண்டான சம்பவங்கள் குறித்தும் மக்கள் அதிகாரம் அமைப்பு விளக்குகிறது.

’’கடந்த  மாதம் இறுதியில் மக்கள் அதிகாரம் அமைப்பின் நெல்லை பகுதி ஒருங்கிணைப்பாளரும் நெல்லை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞருமான தங்கபாண்டியன் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக போலீசு மக்களின் வீடுகளுக்கு இரவில் சென்று தேடுதல் வேட்டை செய்கிறது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுதாக்கல் செய்தார். சம்மன் அனுப்பியே விசாரிக்க வேண்டும் சந்தேகப்படுவோரின்  வீடுகளுக்கு சென்று தொந்தரவு செய்யக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவு வழங்குகிறது. இந்த உத்தரவை போலீசு எப்படி மதிக்கிறது என்பதற்கு  சில சம்பவங்கள்.

 

சம்பவம் 1
கடந்த வாரம் (தீர்ப்பு வழங்கி 20 நாட்கள் பின்னர்) கோவில் பட்டியைச்சேர்ந்த மாரிமுத்து என்ற மக்கள் அதிகாரம் உறுப்பினரின் வீட்டுக்கு இரவு இரண்டு மணிக்கு பத்துக்கும் மேற்பட்ட போலீசு  திடீரென நுழைகிறது. உறங்கிக்கொண்டு இருந்த அவரின் அம்மாவைப்பார்த்து “ தூங்கறீயா, ஒழுங்க எந்திரி, தலையிலேயே பூட்ஸ்கால்ல மெதிச்சுடுவேன்” என்று மிரட்டுகிறார் ஒருபோலீசு. என்ன புள்ளய வளத்து வச்சுருக்க, தூத்துக்குடியில 13 பேரை கொன்னுருக்கான், இவனை பெத்ததுக்கு நீ சாவணும் என்று கண்டபடி கத்துகிறார். மற்ற போலீசு சேர்ந்து கொண்டு வசை பாடுகிறது. பள்ளியில் படிக்கும் அவரது தம்பியின் முகவரியை வாங்கிக்கொண்டு டேய் மாரி வரல உன்னை நாளைக்கு தூக்கிக்கிட்டு போயிடுவோம் என்று மிரட்டல் விடுக்கிறது. வீட்டில் உள்ள பொருட்களை கலைத்துப்போடுகிறது. தொடர்ந்து வந்து வீட்டில் மிரட்டிக்கொண்டே இருக்கிறது. எந்த கெட்டப்பழக்கமும் இல்லாமத்தான நான் எம் மவன வளர்த்தேன், அவனை கொலைகாரன்னு சொல்றாங்களே என்று கண்ணீர் விட்டுக்கொண்டு இருக்கிறார் அந்தத்தாய்.

 

சம்பவம் 2
தூத்துக்குடி இலுப்பையூரணி
ராமர் என்பவர் மக்கள் அதிகாரம் அமைப்பின் ஆதரவாளர். ராமரின் மனைவியும் அவரின் தம்பி மனைவியும் சிறு வயது குழந்தைகள் மட்டுமே இம்மாதம் 10ம் தேதி இரவு 3 மணி அனைவரும் உறங்கிக்கொண்டு இருக்கும் போது சுமார் 40 போலீசுக்காரர்கள். சுவரேறி குதிக்கிறார்கள். பெண்கள் உறங்கொக்கொண்டு இருக்கும் போது டார்ச் லைட் அடித்துப்பார்க்கிறார்கள்.  கதவுகளை ஓங்கி டமால் டமால் என்று அடிக்கிறார்கள். பதறி என்ழுந்த பெண்களை வெளியே வரச்சொல்லி வீடுகளுக்குள் சென்று துழாவுகிறார்கள். சுவரேறி குதித்து வந்த போலீசு வெளியே செல்வதற்கு கதவை திறந்து விடச்சொல்லியிருக்கிறது. எதுக்கு இந்த நேரத்துக்கு வந்தீங்க, பகல்ல தினமும் வரீங்க, பதில் சொல்றோமா இல்லையா , சுவரேறி குதிச்சு வரீங்கலே இதெல்லாம் சரியா இருக்கா என்று இரு பெண்களும் கேட்க, சரிம்மா இனிமேல் கேட்டை பூட்டாம வச்சிரு நாங்க வர வசதியாக இருக்கும் என்று தெனாவெட்டாக பேசியிருக்கிறது போலீசு. நாங்க எல்லாம் தெருவில படுத்துக்கிரோம்  கேட்சாவி, வீட்டுசாவி எல்லாத்தையும்  பூட்டாம வெக்கிறோம் என்று பதிலளித்து இருக்கிறார்கள். அடுத்த இரு நாட்கள் கழித்து மாறு வேடத்தில் வந்த போலீசு வண்டி வாடகை எடுத்துட்டு காசு தராம இருக்கான் உன் வீட்டுக்காரன், போனும் எடுக்க மாட்டேங்கிறான்  என்று காலையில் சத்தம் போட்டு இருக்கிறது. பின்னர் குழந்தைகளை கூட்டிக்கொண்டு போய் தனியே விசாரிக்க ஆரம்பித்தவுடன், போலீசை கண்டறிந்த பெண்கள் கேள்விகேட்டவுடனேயே செல்கிறது. எப்போது போலீசு வீட்டுக்கு வருமோ என்ற பயத்தில் இரவெல்லாம் உறங்காமல் இருக்கிறார்கள் பெண்களும் குழந்தைகளும்.
இச்சம்பவம் நடந்த அடுத்த நாளில் ராமரின் வீட்டுக்கு 10 வீடு தள்ளி இருக்கும் ஜெபமாலை என்பவரை பிடித்துச்சென்று சித்தரவதை செய்கிறது அதனால் உடலெல்லாம் காயங்கள் ஏற்படுகின்றன. அவரை ரிமாண்ட் செய்கிறது.

சம்பவம் : 3
இடம் :ஒத்தகடை
இப்பகுதியில் உள்ள எவர்சில்வர் தொழிலாளரான சரவணன் என்பவரது வீட்டின் கதவை இரவு 3 மணிக்கு ஓங்கி பலமாக அடிக்கிறது போலீசு. சரவணனின் மனைவி” யார் ” என்று கேட்கிறார். போலீசு வந்திருக்கோம், கதவைத்திற என்கிறார்கள். “நைட் 3 மணிக்கு வந்தா கதவைத்திறக்க முடியாது, பகல்ல வாங்க” என்கிறார். ஒரு மணி நேரம் அந்த ஏரியாவையே அதகளப்படுத்திவிட்டு செல்கிறது போலீசு. தொடர்ந்து பக்கத்து வீட்டுல் சரவணனின் போட்டோவை காட்டி யார் தெரியுமா என்று பீதியூட்டிக்கொண்டு இருக்கிறது போலீசு.

சம்பவம் : 4இடம் திருமங்கலம்
பரமன் வயது 55 மக்கள் அதிகாரம் அமைப்பின் ஆதரவாளராக இருக்கிறார்.  இவரை கடந்த 15 நாட்களுக்கு முன் விசாரணைக்கு அழைத்துச் சென்ற போலீசு ஒரு நாள் முழுக்க விசாரித்துவிட்டு தூத்துக்குடிக்கு செல்லவில்லை என்பதை தெரிந்து கொண்டு விடுவித்தது. இந்த நிலையில் 22.06.2018 அன்று காலை 9 மணிக்கு தூத்துக்குடி போலீசு 7 பேர்கள் அவரின் வீட்டில் இருந்து கடத்திக்கொண்டு செல்கின்றனர். போலீசு வேனில் வைத்து பலமாக அடித்துள்ளனர். பின்னர் கண்ணில் துணியைக்கட்டி ஒரு காட்டில் இறக்கிவிட்டு துப்பாக்கியை கையால் தொட்டுப்பார்க்கச்சொல்லி அங்கேயும் அடித்துள்ளனர்.”டேய் அவுசாரி மவனே இந்தத்துப்பாக்கியிலதான் உன்னை சுடப்போறோம், எங்கடா குருசாமி ” என்று தொடர்ந்து அடித்துள்ளனர். இரவுவரை வண்டியில் தூக்கிக்கொண்டு சென்ற போலீசு பின்னர் ஒரு லாட்ஜில் வைத்து இரவு 9 வரை அடித்துள்ளனர். பிறகு திருமங்கலம் தாண்டி ஒரு காட்டில் இறக்கிவிட்டுவிட்டு  சென்றுள்ளனர். கிளம்பும் போது “உன்னை பாவம்னு மன்னிச்சுட்டேன், குருசாமி போன் செஞ்சா இந்த நம்பருக்கு சொல்லு என்று ” ராஜமாணிக்கம் என்ற எஸ்.ஐ சொல்லிவிட்டு சென்றுள்ளார். மகனோ ராணுவத்தில் உள்ள நிலையில் மாடு கன்றை பராமரிக்க வேண்டிய நிலையில் உள்ள அவரால் வீட்டை விட்டும் போக முடியாத நிலை.  வீட்டில் இருந்தாலும் எப்போது வந்து போலீசு கடத்திக்கொண்டு செல்லும் என்ற நிலை.’’

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடியில் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழப்பு

Published on 04/04/2023 | Edited on 04/04/2023

 

 A person who was receiving treatment for Corona loss their live in Tuticorin

 

நாடு முழுவதும் ப்ளூ காய்ச்சலின் பரவல் அதிகரித்துள்ளதோடு கரோனா பாதிப்பும் அதிகரித்து வருகிறது. இதனை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வந்த நிலையில் அதன் விளைவாக மாநில அரசுகளுக்கு கடிதங்கள் வாயிலாக முன்னெச்சரிக்கையோடு நடவடிக்கைகள் எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

 

இந்தியாவில் கரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிய வேண்டும் என மருத்துவத்துறை அமைச்சர் அறிவுறுத்தியிருந்தார். நேற்று புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது.

 

இந்நிலையில் தூத்துக்குடியில் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். தூத்துக்குடியில் மொத்தம் ஐந்து பேர் கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில்  55 வயது கொண்ட ஆண் ஒருவர் கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அவர் உயிரிழந்தார். அவருக்கு ஏற்கனவே நுரையீரல் பாதிப்பு போன்ற இணை நோய் இருந்ததாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Next Story

"காவலர் சுடலைக்கண்ணு மிருகத்தை வேட்டையாடுவது போல் பொதுமக்களை சுட்டுள்ளார்..." - ஆணையம் கடும் அதிருப்தி

Published on 18/10/2022 | Edited on 18/10/2022

 

jlk

 

இன்று சட்டப் பேரவையில் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் அமைக்கப்பட்ட தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான ஆணையத்தின் விசாரணை அறிக்கை சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

 

அந்த அறிக்கையில் பல முக்கிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக " ஸ்டெர்லைட் கலவரத்தைக் கட்டுப்படுத்த காவல்துறை உயர் அதிகாரிகள் தவறிவிட்டனர். ஓடிக்கொண்டிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. போராட்டக்காரர்களில் சிலர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். துப்பாக்கிச்சூட்டுக்கு முன் எவ்வித எச்சரிக்கையும் விடப்படவில்லை. அப்போதைய காவல்துறைத் தலைவர் சைலேஷ்குமார் மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்குள்ளேயே இருந்திருந்தும், அப்போதைய காவல்துறை துணைத் தலைவர் அவராகவே அதிகாரத்தைக் கையிலெடுத்து, துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்". என அறிக்கையில் கூறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

இதில் உச்சபட்சமாக பொதுமக்கள் மீது சூப்பாக்கிச்சூடு நடத்திய காவலர் சுடலைக்கண்ணு பற்றியும் அதில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் "மக்கள் மீது வெறித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்திய காவலர் சுடலைக்கண்ணு, வேட்டையாடுவது போல் பொதுமக்களைச் சுட்டுத்தள்ளியுள்ளார். மனிதத் தன்மை சிறிதும் இன்றி தலையின் பின்புறம், இதயம், தலை எனத் துப்பாக்கிச்சூடு முழுவதும் உயிரை எடுப்பதிலேயே குறியாக இருந்துள்ளார். காலில் சுட வேண்டும் என்பதை அவர் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை". என்று கடுமையான வார்த்தைகளால் ஆணையம் பதிவு செய்துள்ளது.