/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/350_5.jpg)
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கடவாச்சேரி பெரிய தெருவை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மகள் சிவசக்தி(10). இவர் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகள் பிரவீனா(12). அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.
சிதம்பரம் அருகே உள்ள சி.வக்கராமாரி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரின் மகள்கள் வேதிஷா(11). இவர் சிதம்பரம் ராமகிருஷ்ணா பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். கீர்த்தனா(10). இவரும் அதே பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். சகோதிரிகள் 2 பேரும் பள்ளி விடுமுறை என்பதால் கடவாச்சேரியில் உள்ள பாட்டி அஞ்சம்மாள் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் சனிக்கிழமை கடவாச்சேரியில் சிவசக்தி, பிரவீனா, வேதிஷா, கீர்த்தனா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் அதே பகுதியில் உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். இதில் சிவசக்தி, பிரவீனா, வேதிஷா, கீர்த்தனா உள்ளிட்ட 4 பேரும் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். இதை பார்த்த மற்ற பெண்குழந்தைகள் அலறிக் கொண்டு ஊருக்குள் சென்று அங்கிருந்தவர்களிடம் 4 பேர் தண்ணீரில் மூழ்கியதை கூறியுள்ளனர்.
இதனையடுத்து பொதுமக்கள் ஓடி சென்று குளத்தில் இறங்கி தேடி தண்ணீரில் மூழ்கிய பிரவீனா உள்ளிட்ட 4 பேரையும் மீட்டு தனித்தனியாக இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிவசக்தி, பிரவீனா ஆகிய 2 பேரும் உயிரிழந்துவிட்டாத தெரிவித்தனர்.
வேதிஷா மற்றும் அவரது சகோதரி கீர்த்தனா ஆகிய 2 பேரும் மேல்சிகிச்சைக்காக அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது குறித்து அண்ணாமலைநகர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)