
ஆலங்குளம் அருகே கிணறு வெட்டுவதற்காக வெடி வைத்தபோது விபத்து ஏற்பட்டு மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ளது புதுப்பட்டி என்ற கிராமம். இந்த கிராமத்தில் கிணறு வெட்டும் பணி கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில் இன்று வழக்கம்போல் கிணறு தோண்டும் பணியில் 5 பணியாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். கிணற்றின் மேலே வெடியை வைத்து சோதனை நடத்திக் கொண்டிருந்தனர். அப்பொழுது சோதனையின் பொழுது எதிர்பாராத விதமாக வெடியானது வெடித்துச் சிதறியது. இதில் சம்பவ இடத்திலேயே அரவிந்தன் என்ற தொழிலாளர் உயிரிழந்தார்.
அதனைத் தொடர்ந்து மாரிச்செல்வம் அவரது தந்தை ராஜலிங்கம், சாலமன் ஆகிய மூன்று பேர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் ராஜலிங்கம் ஆம்புலன்ஸில் நெல்லை செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். சாலமன் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வெடி விபத்தில் மொத்தமாக மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)