
தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக ஊரடங்கு தளர்வுகளுடன் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் நிலையில், கரோனா தாக்கத்திற்கு பிறகு ஏற்படும் உடல்நலக் குறைவு மற்றும் உடல் பிரச்சினைகள் போன்றவற்றை சீர் செய்வதற்கான கரோனாவுக்குப் பிந்தைய நலவாழ்வு மையத்தை அமைக்க தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்திருந்தது.
அதனடிப்படையில், சென்னை கிண்டியில் உள்ள கிங் மருத்துவமனையில் கரோனாவுக்குப் பிந்தைய நோய்த் தடுப்பு நடவடிக்கைக்காக நலவாழ்வு மையத்தைதமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (01.07.2021) திறந்துவைத்தார். அவருடன் தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். கரோனாவிருந்து மீண்டவர்களுக்கு ஏற்படும் நோய்களைக் கண்காணிக்க மற்றும் சிகிச்சை அளிக்க இந்த மையம் திறக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)