
தி.மு.கழகத் தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக அயலக அணி சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தி.மு.கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை தாலுகா அரசு மருத்துவமனையில் மக்களுக்கு பலன் தரும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் இராமநாதபுரம் மாவட்டம் அயலக அணியின் துணை அமைப்பாளர்கள் ந.முகம்மது ஹனிபா, கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில், கீழக்கரை நகர்மன்ற துணைத் தலைவரும் நகர இளைஞர் அணி அமைப்பாளருமான ஹமீது சுல்தான் முன்னிலையில், கெஜி, மணிகண்டன், எபன், சுபியான், ஃபயாஸ், நயீம், அல்லாபக்ஸ், கிரவுன் அப்துல் காதர், முகேஷ், காளிதாஸ் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.