சென்னை ராயப்பேட்டையில் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று (30/07/2021) காலை 10.00 மணிக்கு தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பில் 50,000 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், தமிழ்நாடுமுதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Advertisment

இந்த விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத் தலைவர் பொன். குமார், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறைச் செயலாளர், தொழிலாளர் ஆணையர் / முதன்மைச் செயலாளர், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

Advertisment