உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கடலூரில் நலத்திட்ட உதவிகள்

Welfare assistance provided in Cuddalore on the occasion of Udhayanidhi Stalin's birthday

தி.மு.க இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணிதொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் கிழக்கு மாவட்ட பொருளாளர் எம்.ஆர்.கே.பி.கதிரவன் தலைமையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கடலூர் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.

கடலூர் மாநகரத்தில் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற நிர்வாகிகள் சார்பில் கடலூர்இக்னைட்எல்டர்ஸ் ஹோம் (Cuddalore Ignite Elders Home) என்னும் முதியோர் இல்லத்தில் உள்ள 35 நபர்களுக்கு புதிய ஆடைகள், போர்வைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கடலூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.கடலூர் கிழக்கு ஒன்றியம் பச்சையாங்குப்பம் ஊராட்சியில் 45 அடி உயரம் கொண்ட கொடி கம்பத்தில் கொடியை ஏற்றிவைத்து, தூய்மை பணியாளர்களுக்கு கதிரவன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

Welfare assistance provided in Cuddalore on the occasion of Udhayanidhi Stalin's birthday

இதேபோல், கடலூர் கிழக்கு, மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட 20 ஊராட்சிகளில் உள்ள மூத்த முன்னோடிகள் 106 பேருக்கு பொற்கிழி வழங்கப்பட்டது. 150 கிரிக்கெட் மற்றும் வாலிபால் அணிக்கு தேவையான கிரிக்கெட் செட், மட்டை ,பந்து, ஸ்டெம்புகள், ஸ்கெட்ச் பந்து மேட்டுகள், கைப்பந்து நெட், கைப்பந்துகள் மற்றும் 2000 விளையாட்டு வீரர்களுக்கு டி-ஷர்ட் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கடலூர்மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா,மாநகர செயலாளர் கே.எஸ்.ராஜா, ஒன்றிய செயலாளர்கள்பி.சுப்ரமணியன், ஆர்.விஜயசுந்தரம், தனஞ்செயன், டி.காசிராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Cuddalore
இதையும் படியுங்கள்
Subscribe